WhatsApp-லேயே ஜியோ மார்ட்டில் ஆர்டர் செய்வது எப்படி? களம் இறங்கிய ரிலையன்ஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் தான் ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியில் சுமாராக 9.9 சதவிகித பங்குகளை வாங்கியது ஃபேஸ்புக் நிறுவனம்.

லோக்கல் வியாபாரிகள், மளிகை கடை அண்ணாச்சிகள், வட இந்தியாவில் கிரானா ஸ்டோர்கள்... என சில்லறை வியாபாரிகள் எல்லாம் அந்த ஜியோ மார்ட்டில் தங்களை பதிந்து கொள்வார்கள்.

இந்த கடைக்காரர்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸப் மூலமாக தங்கள் கடையில் விற்கும் பொருட்களுக்கு ஆர்டர்களைப் பெறுவார்கள். ரிலையன்ஸ் ஜியோ & ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இடடையிலான டீல் இது தான் எனச் சொல்லி இருந்தோம்.

அமல்

அமல்

இந்த வேலையை அடுத்த சில நாட்களிலேயே செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ மார்ட். ஆம் மகராஷ்டிராவில் மும்பை, நவி மும்பை, தானே, கல்யாண் போன்ற பகுதிகளில் வாட்ஸப் செயலி மூலம் ஜியோ மார்ட்டில் மளிகை சாமான்களை ஆர்டர் செய்யும் வசதியை களம் இறக்கி இருக்கிறது ஜியோ.

மற்ற பகுதிகள்

மற்ற பகுதிகள்

விரைவில் வாட்ஸப் மூலம் ஜியோ மார்ட்டில் மளிகை சாமான்களை ஆர்டர் செய்யும் வசதி, இந்தியா முழுக்க கொண்டு வரப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்களாம். இதற்காக லட்சக் கணக்கான வியாபாரிகள் மற்றும் மளிகைக் கடை உரிமையாளர்களை ஜியோ மார்ட்டில் இணைத்து இருக்கிறார்களாம்.

சரி இதை எப்படி ஆர்டர் செய்வது

சரி இதை எப்படி ஆர்டர் செய்வது

1. முதலில் 88500 08000 என்கிற ஜியோ மார்ட் எண்ணை நம் contact லிஸ்டில் சேர்க்க வேண்டும்.
2. அதன் பின், அந்த எண்ணுக்கு Hi என ஒரு செய்தி அனுப்ப வேண்டும்.
3. "Welcome to JioMart WhatsApp Order Booking Service" என்கிற பதிலுடன், ஒரு ஷாப்பிங் லிங்கை அனுப்புவார்கள். இந்த லிங்க் 30 நிமிடங்களுக்கு தான் ஆக்டிவ்வாக இருக்கும்.

மளிகை சாமான் பட்டியல்

மளிகை சாமான் பட்டியல்

4. அந்த லிங்கை க்ளிக் செய்தால், ஒரு பேஜ் வரும். அந்த பேஜில் நம் சொந்த விவரங்களான, மொபைல் எண், முகவரி, ஏரியா... போன்றவைகளைக் கொடுக்க வேண்டும்.
5. அதன் பிறகு தான் மளிகை சாமான் லிஸ்ட் வரும். அந்த லிஸ்டில் எது எல்லாம் தேவையோ அதை எல்லாம் Add செய்து கொண்டே போகலாமாம்.

கடை விவரங்கள்

கடை விவரங்கள்

6. தேவையான பொருட்களை எல்லாம் Add செய்த பின், ஆர்டரை ஜெனரேட் செய்ய வேண்டுமாம். ஆர்டர் ஜெனரேட் செய்ததற்கு, ஒரு இன்வாய்ஸ் நமக்கு வருமாம். அதில் கடை விவரங்கள் மற்றும் கடையின் கூகுள் மேப்ஸ் லொகேஷன் போன்ற விவரங்கள் எல்லாம் இருக்குமாம்.

பேமெண்ட்

பேமெண்ட்

7. கடைக்காரர், எல்லா பொருட்களையும் எடுத்து வைத்த பின், நமக்கு ஒரு எஸ் எம் எஸ் வருமாம். அப்போது, அந்த கடைக்குச் சென்று, நாம் ஆர்டர் செய்த மளிகை பொருட்களுக்கு, எவ்வளவு ஆனதோ, அந்த பணத்தைக் கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கி வர வேண்டியது தானாம். சிம்பில்.

ஆர்டர் நேரம்

ஆர்டர் நேரம்

இப்போதைக்கு குறைந்தபட்ச ஆர்டர் அல்லது அதிகபட்ச ஆர்டர் என வரம்புகள் எதுவும் இல்லையாம். ஆனால், இரவு 7 மணிக்குள் ஆர்டர்களைச் செய்து விட வேண்டும் எனவும் சொல்கிறது ஜியோ மார்ட் குறித்து வெளியான செய்திகள். இன்னும் என்ன எல்லாம் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio Mart: How can we place an order on jio mart using whatsapp

Reliance jio mart has rolled out whatsapp ordering facility. Here we have explained how to make an order on jio mart using whatsapp.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X