5ஜி சேவையில் ஹூவாய் நிறுவனத்தைக் காலி செய்ய வரும் ஜியோ.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான கட்டண 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்பு ஒட்டுமொத்த டெலிகாம் சந்தையும் தலைகீழாக மாறியது மட்டும் அல்லாமல் சேவையின் தரமும், பயன்பாட்டு விகிதமும் மிகப்பெரிய அளவில் மாறியுள்ளது.

Recommended Video

Reliance Jio 5Gஆல் காலி ஆக போகும் Huawei | OneindiaTamil

இந்திய மக்களின் கைகளில் 4ஜி சேவை முழுமையாகச் சென்று அடையும் முன்பே வெளிநாடுகளில் 5ஜி சேவை மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த 5ஜி சேவை வர்த்தகத்திலும் ஜியோ ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதால் பல்வேறு திட்டங்களை ஜியோ ஓரே சமயத்தில் செயல்படுத்தி வருகிறது.

இதன் படி தற்போது இந்தியாவில் 5ஜி சேவையைச் செயல்படுத்துச் சொந்தமாக மென்பொருளை தயாரித்துள்ளது ஜியோ. இதுமட்டும் நடைமுறைக்கு வந்தால் ஹூவாய் நிறுவனத்தின் மொத்த வர்த்தகமும் ஜியோ கைப்பற்றும்.

ஜியோ

ஜியோ

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ சொந்தமாக 5ஜி Software stack மற்றும் ஒபன் ஸ்சோர்ஸ் ஆக இருக்கும் RAN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் அதிநவீன 5ஜி நெட்வொர்க்-ஐ அமைக்க உள்ளது. இதைக் குவால்காம் நிறுவனத்தின் உதவியுடன் நாடு முழுவதும் நிறுவப்பட்டு அடுத்த தலைமுறை 5ஜி நெட்வொர்க் மற்றும் சேவைகளை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

குவால்காம்

குவால்காம்

முகேஷ் அம்பானி தனது வர்த்தகத்தை விரிவாக்க ஜியோ பங்குகளை விற்பனை செய்த போது, ஜியோ டிஜிட்டல் சேவை நிறுவனத்தில் குவால்காம் சுமார் 97.1 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து 0.15 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லாபம்

லாபம்

இந்த மென்பொருள் மூலம் தற்போது 4ஜி நெட்வொர்க் சப்ளையர்களுக்குக் கொடுக்க வேண்டிய அதிக ப்ரீமியம் கட்டணத்தைக் கொடுக்கத் தேவையில்லை, இதனால் ஜியோ நிறுவனத்தின் லாப அளவீடுகள் பெரிய அளவில் உயரும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட உயர் தர சேவைகளை வழங்க முடியும் எனச் சந்தை வல்லுனர் Sanford C. Bernstein தெரிவித்துள்ளார்.

வர்த்தகம்

வர்த்தகம்

இதுமட்டும் அல்லாமல் ஜியோவின் 5ஜி மென்பொருள் வெற்றி அடைந்தால் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் நாடுகளுக்கும், டெலிகாம் நிறுவனங்களுக்கும் ஜியோ தனது சேவையை விற்பனை செய்து பெரிய அளவிலான வருமானத்தையும் வர்த்தகத்தையும் பெற முடியும். இதுமட்டும் அல்லாமல் ஜியோவின் இந்தச் சேவையின் வெற்றியின் மூலம் தற்போது டெலிகாம் தளத்தையும், உபகரணங்களை உருவாக்கி வரும் நோக்கியா, எரிக்சன், ஹூவாய், மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

ஹூவாய்

ஹூவாய்

தற்போது 5ஜி சேவையில் முன்னோடியாகத் திகழும் ஹூவாய் நிறுவனம் உலக டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் வேலையில் ஜியோவின் இந்த அதிரடி இந்நிறுவனத்தின் வர்த்தகத்தையும், வளர்ச்சியையும் பெரிய அளவில் பாதிக்கும் என Sanford C. Bernstein தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் எதிர்ப்பு

உலக நாடுகள் எதிர்ப்பு

ஏற்கனவே ஹூவாய் நிறுவனத்திற்கு உலக நாடுகள் முழுவதும் பெரிய அளவிலான எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் ஜியோவின் இந்த அதிரடி முயற்சி கண்டிப்பாகப் பின்னடைவாக இருக்கும்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

கடந்த மாதம் முகேஷ் அம்பானி, இந்தியாவிலேயே புதிதாக 5ஜி தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கும், சர்வதேச நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அளவிற்கு ஜியோ தயாராகியுள்ளது. உலகிலேயே ஒரு டெலிகாம் சேவை நிறுவனம் எடுக்கும் மிகப்பெரிய முயற்சியாக இது இருக்கும் என முகேஷ் தெரிவித்திருந்தார்.

முக்கியக் கூட்டணி

முக்கியக் கூட்டணி

ஜியோவின் இந்த 5ஜி சேவையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல கூகிள் மற்றும் பேஸ்புக்-ன் டிஜிட்டல் சேவை தளம் பெரிய அளவில் உதவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் ஜியோ டெலிகாம் சேவையில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio's groundbreaking 5G technology solution: Big problem for Huawei

Jio's groundbreaking 5G technology solution: Big problem for Huawei
Story first published: Thursday, August 13, 2020, 19:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X