வெறும் 1999 ரூபாயில் ஸ்மார்ட்போன்.. ஜியோ-வின் செம ஆஃபர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைத்துத் தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் இணைந்து இந்தியர்களுக்காக, இந்தியர்களால், இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஜியோபோன் நெக்ஸ்ட் நவம்பர் 4ஆம் தேதி அதாவது தீபாவளி பண்டிகையின் போது நாடு முழுவதும் விற்பனைக்கு வர உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் போனை வெறும் 1999 ரூபாயில் வாங்க முடியும் என்பது தான்.

ஜியோபோன் நெக்ஸ்ட் : சுந்தர் பிச்சை செம அப்டேட்..! ஜியோபோன் நெக்ஸ்ட் : சுந்தர் பிச்சை செம அப்டேட்..!

கூகுள் திட்டம்

கூகுள் திட்டம்

கூகுள் இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் டிஜிட்டல் சேவையைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே பிரகதி ஓஎஸ் என்ற பெயரில் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 13MP கேரமரா, உடன் பிற மொழி கண்டென்ட்-ஐ தமிழ் அல்லது பிற தாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதியும், அதை வாசிக்கும் வசதியும் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ - கூகுள்

ரிலையன்ஸ் ஜியோ - கூகுள்

ரிலையன்ஸ் ஜியோ - கூகுள் இணைந்து தயாரித்துள்ள ஜியோ போன் நெக்ஸ்ட் உண்மையான விலை 6,499 ரூபாய், ஆனால் ஜியோ இதை ஈஎம்ஐ சேவையின் கீழ் தனது டெலிகாம் சேவை உடன் இணைத்து வெறும் 1999 ரூபாய் ஆரம்பக்கட்ட விலையில் விற்பனை செய்ய உள்ளது.

எப்படி வாங்குவது..?

எப்படி வாங்குவது..?

நவம்பர் 4ஆம் தேதி முதல் ஜியோ மார்ட் கடைகளில் கிடைக்கும், இல்லையெனில் ஜியோ மார்ட் இணையத் தளத்திலும் ரிஜிஸ்டர் செய்து இந்தப் போனை பெறலாம்.

இல்லையெனில் வாஸ்ட்அப் செயலி மூலம் 7018270182 என்ற எண்ணுக்கு 'HI' என டைப் செய்து உறுதி செய்துகொண்டு ஜியோ மார்ட் கடையில் புதிய ஜியோ போன் நெக்ஸ்ட்-ஐ பெறலாம்.

 

 4 ஈஎம்ஐ திட்டம்

4 ஈஎம்ஐ திட்டம்

ஜியோ போன் நெக்ஸ்ட்-ஐ மொத்தமாக 6,499 ரூபாய் கொடுத்து வாங்கலாம் அல்லது 18/24 மாத ஈஎம்ஐ கீழ் Always-on, Large, XL, மற்றும் XXL எனச் சட்டை சைஸ் கணக்காகத் திட்டத்தின் கீழ் பெறலாம். மேலும் ஈஎம்ஐ மூலம் போனை வாங்குபவர்கள் 501 ரூபாய் பிராசசிங் கட்டணம் செலுத்த வேண்டும்.

Always-on திட்டம்

Always-on திட்டம்

24 மாதம் என்றால் மாதம் 300 ரூபாய், 18 மாதம் என்றால் மாதம் 350 ரூபாய் ஈஎம்ஐ. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் மற்றும் ஜியோ சிம் கிடைக்கும். இது மட்டும் அல்லாமல் மாதம் 5ஜிபி இண்டர்நெட் டேட்டா, மற்றும் 100 நிமிடம் வாய்ஸ் கால் சேவையும் கிடைக்கும்.

Large திட்டம்

Large திட்டம்

24 மாதம் என்றால் மாதம் 450 ரூபாய், 18 மாதம் என்றால் மாதம் 500 ரூபாய் ஈஎம்ஐ. ஒரு மாதத்திற்குத் தினமும் 1.5ஜிபி இண்டர்நெட் டேட்டா, மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையும் கிடைக்கும்.

XL திட்டம்

XL திட்டம்

24 மாதம் என்றால் மாதம் 500 ரூபாய், 18 மாதம் என்றால் மாதம் 550 ரூபாய் ஈஎம்ஐ. ஒரு மாதத்திற்குத் தினமும் 2ஜிபி இண்டர்நெட் டேட்டா, மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையும் கிடைக்கும்.

XXL திட்டம்

XXL திட்டம்

24 மாதம் என்றால் மாதம் 550 ரூபாய், 18 மாதம் என்றால் மாதம் 600 ரூபாய் ஈஎம்ஐ. ஒரு மாதத்திற்குத் தினமும் 2.5ஜிபி இண்டர்நெட் டேட்டா, மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையும் கிடைக்கும். அனைத்து ஈஎம்ஐ திட்டத்திற்கும் 501 ரூபாய் பிராசசிங் கட்டணம் செலுத்த வேண்டும்.

போன் எப்படி இருக்கு

போன் எப்படி இருக்கு

இந்தப் போன் முன்னணி பிராண்டுகளின் டாப் போன் உடன் போட்டிப்போடும் போன் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பியூச்சர் போன் அதாவது பட்டன் போன்களைப் பயன்படுத்தி வரும் 2ஜி வாடிக்கையாளர்களை 4ஜி சேவை தளத்திற்குக் கொண்டு வரும் நோக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

குறைவான விலை

குறைவான விலை

விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தையில் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் போன்களை ஒப்பிடுகையில் தரம் சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் 6499 ரூபாய்க்கு எந்த விதத்திலும் தரம் குறைவாக இருக்காது என்றும் நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

JioPhone Next priced at just Rs 1,999 with 4 EMI Options : Reliance Jio

JioPhone Next priced at just Rs 1,999 with 4 EMI Options and 501 as processing cost, without EMI it cost 6499 only. Google tailored New OS for Indian users.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X