நகரங்களை காலி செய்யும் மக்கள்.. வேலை இழப்பு, பண நெருக்கடி.. புலம்பெயர் தொழிலாளர்களின் மறுபக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா என்னும் பேரலையில் சிக்கித் தவித்து வரும் மக்கள், எப்படி அதிலிருந்து மீண்டு வர போகிறார்களோ? ஒரு புறம் வாட்டி வதைக்கும் வறுமை. பொருளாதார நெருக்கடி, பசி பட்டினி, வேலையின்மை என பலவும் மக்களை பாடாய்படுத்தி வருகின்றன.

 

முதல் அலையாவது பொருளாதாரத்தினைத் தான் பெரிய அளவில் சுருட்டிக் கொண்டு போனது. ஆனால் இரண்டாம் அலை பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டுள்ளது.

அலிபாபாவுக்கு சிக்கல்.. ஆயிரமாயிரம் ஊழியர்கள் பணியமர்த்தல்.. பைட்டான்ஸின் அதிரடி திட்டம்..!

உயிருக்கு பயந்து நகரங்களை விட்டு காலி செய்யும் மக்கள், வேலையிழந்து, ஏற்படும் பொருளாதார நெருக்கடியால், பசி பட்டினியால் வாடுகின்றனர்.

மக்கள் தவிப்பு

மக்கள் தவிப்பு

இன்றைய நெருக்கடியான காலகட்டங்களில் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன. இப்படி லாக்டவுன் காலகட்டத்தில் கையில் பணமில்லாமல் நகரங்களில் வேலையில்லாமல், போதிய வருமானம் இல்லாமல், நெருக்கடி நிலைக்கு செல்வதை விட, கூலி தொழில் செய்தேனும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சொந்த கிராமங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

மெட்ரோவில் அதிக பாதிப்பு

மெட்ரோவில் அதிக பாதிப்பு

சில தொழிலாளர்கள் வீடடில் இருந்து பணியாற்றினாலும், இனியும் அந்த பணி நிலைக்குமா? என்ற நிலையே இருந்து வருகின்றது. ஏனெனில் சமீபத்தில் ஒரு செய்தியில் மெட்ரோ நகரங்களில் அதிகளவில் கொரோனா தாக்கம் ஏற்படுவதால், ஊழியர்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை. https://tamil.goodreturns.in/news/how-to-impact-s-huge-coronavirus-increases-is-impaction-of-big-other-country-firms-023502.html வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்றாலும், பலரும் விடுமுறையில் உள்ளனர். இதனால் இந்திய நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டு வந்த அவுட்சோர்சிங் பணிகளை, மற்ற நாடுகளுக்கு கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக படித்தோம்.

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்
 

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்

ஒரு சிறு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் மாதம் 12,000 ரூபாய் சம்பளம் பெறுகின்றார். அவருக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. புதிய வேலையும் கிடைக்கவில்லை. லாக்டவுனுக்கு, அடுத்து வரும் பிரச்சனைகளுக்கும் பயந்தும் அவரும், அவரது மனைவி, மகள்களுடன் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

டிக்கெட்டுக்கு பணமில்லாமல் தடுமாறும் தொழிலாளி

டிக்கெட்டுக்கு பணமில்லாமல் தடுமாறும் தொழிலாளி

இதே மற்றொரு உத்திரபிரதேசத்தினை சேர்ந்த தொழிலாளி விஜய் விஸ்வகர்மா, தனக்கு, மாதம் 12,500 சம்பளத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். ஆனால் இந்த லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் காத்துக் கொண்டுள்ளதாகவும், பணிபுரிந்த ஆலையின் உரிமையாளர் மே 15க்குள் கூறியதையடுத்து, அதன் பிறகு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

சம்பளம் கிடைக்கவில்லை

சம்பளம் கிடைக்கவில்லை

இது குறித்து உத்திரபிரதேச கல்யாண் பரிஷத்தின் பொது செயலாளர், ராம் பவன் கோஸ்வாமி, புலம் பெயர் தொழிலாளர்களிடம் இருந்து எங்களுக்கு ஏராளமான போன் கால்கள் வருகின்றன. அதில் பலரும் சம்பளம் பெறவில்லை. பெரிய தொழில்துறைகள் என பலவும் 90% மூடப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் தான் ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப நினைக்கின்றனர் என கூறுகிறார்.

வதைக்கும் பட்டினி

வதைக்கும் பட்டினி

இது குறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் ராம் பவன் கூறியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக 8,000 - 10,000 ஊழியர்கள் வரை ஊஉதியம் பெறவில்லை. இவர்களில் 90% பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். இதனால் பட்டினி கிடப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நிகழ்வின் அச்சம்

கடந்த ஆண்டு நிகழ்வின் அச்சம்

கடந்த ஆண்டில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், தங்கள் பணிக்கு மீண்டும் திரும்பவில்லை. இந்த நிலையில், இருக்கும் ஊழியர்களும் கடந்த ஆண்டினை போல பிரச்சனைகள் வந்தால் என்ன செய்வது என்ற அச்சத்தாலேயே, முன் கூட்டியே தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Job loss, cash crunch spur another leaving of migrants

Coronavirus impact.. Job loss, cash crunch spur another leaving of migrants
Story first published: Sunday, May 9, 2021, 20:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X