எலான் மஸ்கை கடுமையாக விமர்சித்த ஜோ பைடன்.. ட்விட்டரை எதற்காக வாங்கினார் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ட்விட்டர் நிறுவனம் இப்போது தான் ஒரு புத்திசாலியின் கைகளுக்கு போயிருக்கிறது என, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் தனது கருத்தினை தெரிவித்து பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார்.

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து சர்வதேச அளவில் பலரின் கவனமும், ட்விட்டரின் பக்கம் திரும்பியுள்ளது எனலாம்.

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதை விட, அதன் பிறகு அவர் எடுத்து வரும் அதிரடியான நடவடிக்கைகள், ஒவ்வொன்றும் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மாஸ் காட்டும் இன்ஃபோசிஸ்.. விரைவில் காக்னிசண்டை பின்னுக்கு தள்ளலாம்.. இந்திய நிறுவனம்ன்னா சும்மாவா? மாஸ் காட்டும் இன்ஃபோசிஸ்.. விரைவில் காக்னிசண்டை பின்னுக்கு தள்ளலாம்.. இந்திய நிறுவனம்ன்னா சும்மாவா?

ட்விட்டரின் எதிர்காலம்?

ட்விட்டரின் எதிர்காலம்?

குறிப்பாக ட்விட்டர்கள் ஊழியர்கள் மத்தியில் இது பெரும் களோபரத்தினையே ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது ஒரு புறம் எனில், ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.. மறுபுறம் விளம்பரதாரர் நிறுவனங்கள் பலவும் ட்விட்டரின் எதிர்காலம் குறித்து கவலையினை எழுப்பியுள்ளனர். பல நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களையே தடை செய்துள்ளன.

ஜோ பைடன் விமர்சனம்

ஜோ பைடன் விமர்சனம்

இதற்கிடையில் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளது அவர் பொய்களை பரப்பவே என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ட்விட்டருக்கான எடிட்டர்கள் இனி அமெரிக்காவில் இருக்க போவதில்லை. சமூக வலைதளங்களில் குழந்தைகள் பிரச்சனையில் இருப்பதை எப்படி புரிந்து கொள்ள முடியும் என விமர்ச்சித்துள்ளார்.

சமூக வலைதளங்கள்
 

சமூக வலைதளங்கள்

மறுபுறம் அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன் பியர், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப முடியும். விரும்பத்தகாத வெறுப்பான பேச்சுகள் மற்றும் தவறான தகவல்களை குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஜோ பைடன் உணர்ந்து கொண்டுள்ளார் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

டிரம்ப் - எலான் மஸ்கின் பரிமாற்றம்

டிரம்ப் - எலான் மஸ்கின் பரிமாற்றம்

ஆனால் மறுபுறம் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ட்விட்டர் தற்போது தான் ஒரு புத்தாலிசாலியின் கையில் உள்ளது. இனிமேல் நம் தேசத்தை வெறுக்கும் இடதுசாரி மன நோயாளிகளின் கையில் இருக்காது என்றும் கூறியிருந்தார்.

எலான் மஸ்கோ ட்விட்டரை வாங்கிய கையோடு வாழ் தடையை நீக்குவது குறித்து சூசகமாக கருத்து கூறியிருந்தார்.. இந்த நிலையில் ட்ரம்பின் இந்த பாரட்டுதலும் கவனம் ஈர்க்கும் ஒன்றாக இருந்து வருகின்றது.

தேர்தல் சமயத்தில் பிரச்சனை

தேர்தல் சமயத்தில் பிரச்சனை

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். அப்போது அவரின் வெற்றியை அங்கீகரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியபோது, ட்ரம்ப்பின் ஆதாரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரமானது ஒரு கட்டத்தில் மோசமான நிலையை எட்டவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

டிரம்பின் சமூக வலைதளம்?

டிரம்பின் சமூக வலைதளம்?

டிரம்ப் தொடர்ந்து வன்முறையை சமூக வலைதளங்களில் தூண்டியதாக கூறி பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமுக வலைதளங்கள், அவரது கணக்குகளை முடக்கின. அந்த காலகட்டத்தில் ட்விட்டர் நிறுவனம் டிரம்பின் கணக்கினை வாழ் நாள் முழுவதும் தடை விதித்தது. இதே பேஸ்புக் நிறுவனம் 2 ஆண்டுகள் தடை விதித்தது. அதன் பிறகு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் சொந்தமாக ஒரு சமூக வலைதளத்தினை உருவாக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

என்ன செய்ய போகிறார் எலான் மஸ்க்

என்ன செய்ய போகிறார் எலான் மஸ்க்

முன்னாள் அதிபர் பாராட்டியுள்ள நிலையில், தற்போதைய அதிபர் பொய்களை பரப்புவதற்காகவே என கடுமையான விமர்சனம் செய்துள்ளார். ட்விட்டர் இத்தகைய விமர்சனங்களையும் தாண்டியும், எப்போது வெற்றிகரமான நிறுவனமாக மாறப்போகிறது. இன்னும் எத்தனை விமனர்சனங்கள், பாராட்டுதல்கள், சவால்களுக்கு மத்தியில் எலான் மஸ்கின் முயற்சி கைகொடுக்குமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Joe Biden slams Elon Musk after Twitter takeover

US President Joe Biden has criticized Elon Musk's purchase of Twitter for spreading lies
Story first published: Saturday, November 5, 2022, 23:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X