1920-க்கு பின் வருமான வரியில் அதீத உயர்வு.. ஜோ பைடன் முடிவால் அமெரிக்க மில்லியனர்கள் கவலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் பொருளாதாரம் கொரோனா தாக்கத்தில் இருந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசு முயற்சி செய்து வருகிறது.

 

சமீபத்தில் 1.9 டிரில்லியன் டாலர் அளவிலான பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுச் செயல்படுத்தத் துவங்கியுள்ள நிலையில், அடுத்ததாக மாபெரும் இன்பரா திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது அமெரிக்க அரசு.

இந்நிலையில் குழந்தைகள் நலன், கல்வி மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்துடன் விடுமுறை ஆகிய திட்டங்களுக்கு நிதி திரட்டும் வகையில் அமெரிக்காவின் பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்தவும், முதலீட்டில் கிடைக்கும் லாபத்தின் மீதான வரியையும் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது ஜோ பைடன் அரசு.

கையை நீட்டினால் போதும்.. கொரோனா காலத்தில் அமேசானின் சூப்பரான சேவை..!

 ஜோ பைடன் அரசு

ஜோ பைடன் அரசு

ஜோ பைடன் அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் கொரோனா பாதிப்பு மூலம் ஏற்பட்டு உள்ள பொருளாதாரப் பாதிப்பையும், வேலைவாய்ப்பு பாதிப்பையும் சரி செய்யப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அரசு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகளவிலான நிதி தேவை உருவாகியுள்ளது.

 நிதி திரட்டும் பணிகள்

நிதி திரட்டும் பணிகள்

இந்த நிதி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவே பத்திர முதலீடுகள் முதல் வரி உயர்வு வரையில் பல அறிவிப்புகளை அறிவித்துள்ள அமெரிக்க அரசு, தற்போது அமெரிக்கப் பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்தவும், முதலீடுகளில் கிடைக்கும் லாபத்தின் மீதான வரியை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.

 வருமான வரி உயர்வு
 

வருமான வரி உயர்வு

ஜோ பைடன் நிர்வாகம் தற்போது எடுத்துள்ள முடிவின் படி பெரும் பணக்காரர்கள் மீதான வருமான வரி (Top Marginal Income Tax Rate) இதுவரை அதிகப்படியாக 37 சதவீதம் விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இதை 39.6 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

 1 மில்லியன் டாலர் வருமானம்

1 மில்லியன் டாலர் வருமானம்

இந்த வரி வருடத்திற்கு 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான சம்பாதிக்கும் அனைவருக்கும் பொருந்தும் என்பதால் வருமான வரியில் ஏற்படுத்த உள்ள மாற்றம், அதாவது 37 சதவீதத்தில் இருந்து 39.6 சதவீதம் வரையிலான உயர்வு, அரசின் வரி வருமானத்தை இரட்டிப்பு செய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

 1920 ஆண்டுக்குப் பின்

1920 ஆண்டுக்குப் பின்

பைடன் அரசு தற்போது முடிவு செய்துள்ள வரி உயர்வு ஒப்புதல் அடைந்து நடைமுறைக்கு வந்தால், 1920க்கு பின்பு அமெரிக்க முதலீட்டாளர்கள் செலுத்தும் அதிகப்படியான இன்வெஸ்ட்மென்ட் கெயின்ஸ் வரி இதுதான். 2வது உலகப் போர்-க்குப் பின் அமெரிக்காவின் வருமான வரி மாற்றத்தில் இது பெரும் மாற்றமாக இருக்கும்.

 அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவு

அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவு

இந்த அறிவிப்பின் காரணமாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் நேற்று மதிய வர்த்தகத்தில் 1 சதவீதம் வரையில் S&P 500 குறியீடு சரிந்தது. முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டால் முதலீட்டுச் சந்தை பாதிக்கும் என்பதால் இந்தச் சரிவு ஏற்பட்டு உள்ளது.

 அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல்

ஜோ பைடன் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்று இருந்த இந்த வரி உயர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஜோ பைடன் அரசு உடனடியாக அமலாக்கம் செய்ய முடியாது அமெரிக்க நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஒப்புதல் அளிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சி ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் பைடன் அரசின் இந்த முடிவு வெற்றி பெறுவது என்பது சந்தேகம் தான்.

 2.3 டிரில்லியன் டாலர் இன்பரா திட்டம்

2.3 டிரில்லியன் டாலர் இன்பரா திட்டம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்கனவே பைடன் அரசின் 2.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலா இன்பரா மற்றும் வேலைவாய்ப்புத் திட்டத்திற்குக் குடியரசு கட்சி கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், பைடன் அரசு வருமான வரி உயர்வு, அதுவும் பெரும் பணக்காரர்களைப் பாதிக்கும் வரியை அதிகரிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது.

ஜோ பைடனின் மாபெரும் 2.3 டிரில்லியன் டாலர் இன்பரா திட்டம்.. கார்பரேட் வரி உயர்த்த முடிவு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Joe Biden to float historic tax increase since 1920 on investment gains for the rich

Joe Biden to float historic tax increase since 1920 on investment gains for the rich
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X