வீட்டில் இருந்தே வேலை பாருங்க.. ஜேபி மார்கனின் சூப்பர் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் வருகைக்கு பிறகு நமது வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்கள் வந்துள்ளன. குறிப்பாக ஊழியர்கள் பணிபுரியும் சூழல் என்பது வெகுவாக மாற்றம் கண்டுள்ளது.

பொதுவாக அலுவலகத்தில் சென்று பணிபுரிந்து வந்த நிலை மாறி, கொரோனாவால் வீட்டில் இருந்தும் பணி புரியலாம் என்ற நிலை உருவாகியது. அதன் பின்னர் ஹைபிரிட் கலாச்சாரம் என்பது தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

தற்போது இதனை இன்னும் மாற்றம் செய்ய ஓமிக்ரான் தாக்கம் வந்துள்ளது.

மாதம் ரூ.3000 முதலீடு மூலம் எப்படி ரூ.1 கோடி சாத்தியம்... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..! மாதம் ரூ.3000 முதலீடு மூலம் எப்படி ரூ.1 கோடி சாத்தியம்... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

வீட்டில் இருந்து வேலை

வீட்டில் இருந்து வேலை

இதற்கிடையில் தற்போது ஜேபி மார்கன் (JPMorgan Chase & Co) தனது ஊழியர்களுக்கு, 2022ம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தினை வழங்கியுள்ளது. இதனால் பிப்ரவரி 1ம் தேதிக்கு பிறகு ஊழியர்கள் அலுவகத்திற்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

விடுமுறை & பயணம்

விடுமுறை & பயணம்

இதே சிட்டி வங்கி அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் நீண்ட திட்டங்களை மாற்றம் செய்யவில்லை என்று வங்கி ஊழியர்களிடம் கூறியது. விடுமுறை பயணம் மற்றும் கூட்டங்கள் அதிகரித்து வருவதால், முதல் இரண்டு வாரங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளது.

வங்கிகள் ஆர்வம்

வங்கிகள் ஆர்வம்

கடந்த டிசம்பர் 15 அன்றே சிட்டி வங்கி நியூயார்க் அலுவலகத்தில் ஊழியர்களிடம், விடுமுறை காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் எனறு கூறியது.

ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக, மற்ற நிறுவனங்களை காட்டிலும் வங்கி குழுமம் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்ப வர கூறுவதில் முனைப்பு காட்டின. ஆனால் ஓமிக்ரான் அச்சம் காரணமாக மீண்டும் ஊழியர்கள் வீட்டில் பணியாற்ற கூறி வருகின்றன.

தடுப்பூசி

தடுப்பூசி

இந்த மாத தொடக்கத்தில் ஜேபி மார்கன் மன்ஹாட்டனில் தடுப்பூசி போடப்படாத ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தியது. அதேசமயம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மாஸ்க் அணிவதில் இருந்து தளர்வுகளையும் அளித்தது.

ஐடி நிறுவனங்களின் அறிவிப்பு

ஐடி நிறுவனங்களின் அறிவிப்பு

இதே போல பல முன்னணி ஐடி நிறுவனங்களும் இந்தியாவில் மீண்டும் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய கூறி வருகின்றன. குறிப்பாக டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களும் இன்னும் சிறிது காலத்திற்கு ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய கூறியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

JP morgan, Citigroup employees will continue work from home

JP morgan, Citigroup employees will continue work from home/வீட்டில் இருந்தே வேலை பாருங்க.. ஜேபி மார்கனின் சூப்பர் அறிவிப்பு..!
Story first published: Friday, December 31, 2021, 15:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X