சரிவில் பொருளாதாரம்! சாட்சி சொல்லும் PMI!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் பிரச்சனை உலகில் எந்த ஒரு நாட்டையும் விட்டு வைத்ததாகத் தெரியவில்லை. அமெரிக்கா தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை பாரபட்சம் இல்லாமல் எல்லா நாட்டு பொருளாதாரத்தையும் அடித்து நொறுக்கி இருக்கிறது. இதில் இந்தியா மட்டும் என்ன பெரிய விதி விலக்கை கண்டு இருக்க முடியும்.

சரிவில் பொருளாதாரம்! சாட்சி சொல்லும் PMI!

 

இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது என்பதை உறுதி செய்யும் விதத்தில் இந்தியாவின் உற்பத்திக்கான Purchasing Managers' Index (PMI) கடந்த ஜூலை 2020 மாதத்தில் 46-க்கு வந்து நிற்கிறது.

கடந்த ஜூன் 2020 மாதத்தில் இந்த Purchasing Managers' Index (PMI) 47.2 ஆக இருந்தது. பொதுவாக இந்த பி எம் ஐ புள்ளிகள் 50-க்கு மேல் இருந்தால் தான் வளர்ச்சியில் இருப்பதாகப் பார்ப்பார்கள்.

கடந்த ஏப்ரல் 2020-ல், வரலாறு காணாத அளவுக்கு, பி எம் ஐ 27.4 புள்ளிகளைத் தொட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து பி எம் ஐ ஏற்றம் கண்டு வருகிறது.

பி எம் ஐ மீண்டும் கீழ் நோக்கிப் போவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் அவுட் புட் & புதிய ஆர்டர்களில் தெரிகிறதாம். கொரோனா வைரஸ் லாக் டவுன் பிரச்சனையால், இன்னும் பல கம்பெனிகள் & நிறுவனங்களுக்கு வேலை கிடைக்காமல் போராடிக் கொண்டு இருக்கிறார்களாம். கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனை ஒரு முடிவுக்கு வர வேண்டும் அதோடு, கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும் அதுவரை உற்பத்தியில் ஒரு முன்னேற்றத்தைப் பார்க்க முடியாது என்கிறார் ஐ ஹெச் எஸ் மார்கிட் நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர் எலியட் கெர் (Elliot Kerr).

ஒருவேளை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அது மேற்கொண்டு புதிய லாக் டவுன்களைக் கொண்டு வரும். அது இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்கும் உற்பத்தித் துறை மீண்டு வருவதற்கு, பெரிய தடையாக இருக்கும் என்கிறார் எலியட் கெர்.

இந்திய உற்பத்தித் துறையில் புதிய ஆர்டர்கள் தொடர்ந்து 4-வது மாதமாக சரிந்து இருக்கிறதாம். போதாக் குறைக்கு தொழிலாளர் பிரச்சனை, மூலப் பொருட்கள் சப்ளை செயின் பிரச்சனை வேறு இந்திய உற்பத்தித் துறையை படாத பாடு படுத்திக் கொண்டு இருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

July 2020 the PMI for manufacturing fell to 46 4th straight month fall

The Purchasing Manager Index for the month of July 2020 has fell to 46. This is the fourth straight month fall.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X