பழைய காருக்கு குட் பை சொல்ல காத்திருங்க.. 5% தள்ளுபடியுடன் புதிய கார் வாங்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையினரின் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்த வாகன அழிப்பு திட்டம், கடந்த பட்ஜெட் 2021ல் அறிவிக்கப்பட்டது.

 

இது ஆட்டோமொபைல் துறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது எனலாம். இந்த நிலையில் வாகன விற்பனை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், புதிய வாகன விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகன விற்பனையை ஊக்குவிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பழைய வாகனங்களை கொடுத்து, புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியை வழங்கலாம் என கூறியுள்ளார்.

அரசின் வாகன அழிப்பு திட்டம்

அரசின் வாகன அழிப்பு திட்டம்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தன்னார்வ வாகன அழிப்பு திட்டத்தின் படி, தனி நபர் வாகனங்களுக்கு 20 வருடங்கள் கழித்தும், வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகள் கழித்தும் ஸ்கிராப்பிங் செய்யும் திட்டம் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. உண்மையில் இந்த திட்டம் அமலுக்கு வரும்போது, இது வாகனத்துறைக்கு பெரிய ஊக்கத்தினை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

ஏனெனில் இதனால் புதிய வாகனங்களின் தேவை அதிகரிக்கும். இதனால் புதிய வாகனங்கள் மேலான ஆர்வம் அதிகரிக்கும். இதனால் புதிய வாகனங்களுக்கான தேவையும் கூடும். அதோடு சுற்று சூழல் பாதிப்பும் இதனால் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக, வாகன நிறுவனங்கள் தற்போது சில சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி
 

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி

எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இதே தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது இந்த பசுமை வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

சில நகரங்களில் அதிக வரி

சில நகரங்களில் அதிக வரி

அதோடு 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு குறிப்பாக அதிகம் மாசடைந்த நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிகப்படியான பசுமை வரி (சாலை வரியில் 50%) விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆக இதோடு இந்த ஸ்கிராப்பேஜ் பாலிசியும், துவண்டு போன வாகனத் துறையை மீட்டெடுக்க உதவும் என்றும் கூறப்பட்டது.

வாகனத் துறையின் வருவாய் அதிகரிக்கும்

வாகனத் துறையின் வருவாய் அதிகரிக்கும்

தற்போது வாகன துறையின் வருவாய் 4.5 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, வாகன அழிப்பு திட்டமானது இதனை 30 சதவீதம் அதிகரித்து, 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கட்கரி கூறியுள்ளார். மேலும் தற்போது 1.45 லட்சம் கோடியாக இருக்கும் உதிரி பாகங்கள் ஏற்றுமதி, 3 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.

வேலை வாய்ப்புகள் பெருகும்

வேலை வாய்ப்புகள் பெருகும்

இந்த கொள்கை நடைமுறைக்கு வந்தவுடன் இரும்பு, பிளாஸ்டிக், ரப்பர், அலுமினியம் உள்ளிட்ட ஸ்கிராப்கள் கிடைக்கும். இதனால் அவற்றின் விலையானது 30 - 40% குறையும். எல்லாவற்றும் மேலாக இந்த பாலிசி வேலை வாய்ப்புகளை உருவாக்கும். புதிய ஸ்கிராப்பிங் கொள்கை புதிய தொழில் நுட்பங்களுடன் சிறந்த மைலேஜ் கொண்ட வாகனங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய்க்கு செலவிடும் தொகையை குறைக்கும் என்றும் கட்கரி கூறியுள்ளார். .

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Junk your old car and get 5% offer from automakers: nitin gadkari

Vehicle scrappage policy.. Junk your old car and get 5% offer from automakers: nitin gadkari
Story first published: Sunday, March 7, 2021, 19:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X