17 வயதில் டெஸ்லா-வில் வேலை.. அசத்தும் இளம் இந்திய மாணவர் அபரூப்.. வேற லெவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய நவீனமயமான வாழ்க்கையில் எதுவுமே முடியாது என்பது இல்லை எனக் கூறும்போது பல நேரம் நம்ப முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில், நம்மை அசரவைக்கும் அளவிற்குச் சில நேரம் உண்மையாகி விடுகிறது.

இன்று இந்தியாவில் பல பட்டதாரிகள் படிப்பை முடித்ததும் ஒரு வேலையைப் பெறுவதில் எவ்வளவு போட்டி இருக்கு என்பதை நம் தினமும் ஏதேனும் ஒரு வகையில் பார்த்தோ கேட்டோ வருகிறோம்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் அபரூப் ராய் என்ற 17வயது பள்ளி மாணவர் தற்போது உலகமே திரும்பிப் பார்க்கும் டெஸ்லா நிறுவனத்தின் புட் பிரின்டிங் திட்டத்தில் ரிசர்ச் அசிஸ்டென்ட் ஆகப் பணியாற்றி வருகிறார்.

புது வீடு வாங்கினா கார் பரிசு.. அதும் டெஸ்லா கார்.. எந்த ஊரில் தெரியுமா? புது வீடு வாங்கினா கார் பரிசு.. அதும் டெஸ்லா கார்.. எந்த ஊரில் தெரியுமா?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் நிர்வாகத்தின் கீழ் பணியாற்ற முடியாது என டிவிட்டர் நிறுவனத்தில் ஊழியர்கள் தெறித்து ஓடி வரும் நிலையில், வெறும் 17 வயதான அபரூப் ராய் டெஸ்லா நிறுவனத்தின் புட் பிரின்டிங் திட்டத்தில் ரிசர்ச் அசிஸ்டென்ட் ஆகப் பணியாற்றி வருகிறார் என்ற செய்தி பலருக்கும் வியப்பு அளிக்கிறது. யார் இவர்..?

விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு

விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு

அபரூப் ராய் டெஸ்லா நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பே NASA, ESA, JAXA ஆகிய 3 விண்வெளி ஆராய்ச்சி அமைப்பிடம் இருந்து கொரோனா தொற்று மூலம் உலகம் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறியும் EO DASHBOARD HACKATHON-ல் பங்கேற்பு சான்றிதழைப் பெற்றுள்ளார்.

இரண்டு புத்தகங்கள்

இரண்டு புத்தகங்கள்

மேலும் அவர் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்- பொது வேதியியலில் உள்ள சிக்கல்கள் மற்றும் மாஸ்டர் ஐசிஎஸ்இ வேதியியல் செமஸ்டர் ஆகிய தலைப்புகளில் புத்தங்களையும் வெளியிட்டு உள்ளார்.

மூன்று ஆய்வு அறிக்கை

மூன்று ஆய்வு அறிக்கை

மூன்று ஆய்வு அறிக்கைகளை வேதியியல் பிரிவில் சமர்ப்பித்துள்ளார். இவை இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் சயின்ஸ் அண்ட் ரிசர்ச், இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் சயின்டிஃபிக் ரிசர்ச் இன் கெமிக்கல் சயின்ஸ் மற்றும் ஜர்னல் ஆஃப் இயற்பியல் மற்றும் பொருட்களின் வேதியியல் ஆகும்.

ISRO சைபர்ஸ்பேஸ் போட்டி

ISRO சைபர்ஸ்பேஸ் போட்டி

அபரூப் ராய் இந்தப் புத்தகம் மற்றும் ஆய்வு அறிக்கைகளை 10 வது படிக்கும் போதே வெளியிட்டு உள்ளார். 2020 இல், அவர் ISRO சைபர்ஸ்பேஸ் போட்டியில் அகில இந்தியா அளவில் 11 ரேங்க் மற்றும் வேதாந்து மாஸ்டர் ஸ்காலர்ஷிப் தேர்வில் (VSAT) இந்தியா அளவில் 706 ரேங்க் பெற்றார்.

மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி

மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி

ஒலிம்பியாட் தேர்வுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதைத் தாண்டி கொரோனா வைரஸ் தொற்ரு காலத்தில் லாக்டவுன் காலத்தில் தண்ணீரில் உப்பைக் கரைத்து மின்சாரத்தைக் கடத்துவது உட்படப் பல சோதனைகளை அவர் வீட்டில் செய்தார், அதற்காக அவர் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி) விஞ்ஞானிகளின் உதவியைப் பெற்றுள்ளார்.

 NIT துர்காபூர்

NIT துர்காபூர்

இதைத் தொடந்து வீட்டில் செய்ய முடியாத ஆய்வுகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக NIT துர்காபூரில் உள்ள வேதியியல் துறைத் தலைவருக்கு அவர் கடிதம் எழுதி உதவியைக் கேட்டார். இதன் தற்போது அபரூப் ராய் என்ஐடி துர்காபூரில் உள்ள ஒரு ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்து வருகிறார்.

11 ஆம் வகுப்பு

11 ஆம் வகுப்பு

டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றுவதாகத் தகவல் வெளியான நிலையில் மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஜூம் இன்டர்நேஷனல் பள்ளியில் அபரூப் ராய் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tesla டெஸ்லா
English summary

Just 17 year old Aparup Roy works as Research Assistant with Tesla; trending today

Just 17 year old Aparup Roy works as Research Assistant with Tesla; trending today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X