இந்திய வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி பெரு நகரங்களை மட்டுமே சார்ந்து இருக்கும் நிலை வேகமாக மாறி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
குறிப்பாகக் கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தியாவில் டெக் சேவை நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், ஆன்லைன் சேவை நிறுவனங்கள் எனப் பல துறையைச் சேர்ந்தவர்கள் செலவுகளைக் குறைக்கவும் அதேநேரத்தில் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகப் பெரு நகரங்களைத் தாண்டி 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு நகர்ந்து வருகிறது.
இதனால் ரீடைல் வர்த்தகச் சந்தையும் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு நகரத் துவங்கிய காரணத்தால் தற்போது மால் ஆப்ரேட்டர்களும் பின் தொடர துவங்கியுள்ளனர்.

வேலைவாய்ப்பு, வருமானம்
ஒரு பகுதியில் மக்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானமும் மக்களுக்கு அதிகரித்தாலே வர்த்தகம் தானாக அதிகரிக்கும் அந்த வகையில் 2ஆம் தர நகரங்களுக்குப் பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் முதல் சிறிய உற்பத்தி நிறுவனங்கள் வரையில் விரிவாக்கம் செய்து வரும் நிலையில் வர்த்தகம் தானாக அதிகரித்தும். இதை உணர்ந்த மால் கட்டுமான மற்றும் மால் ஆப்ரேட்டர்கள் புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.

2ஆம் தர நகரங்கள்
இந்தியாவில் முன்னணி ரீடைல் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைச் சிறு நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யத் தயாராகியிருக்கும் நிலையில், இந்த வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள 2ஆம் தர நகரங்களான இந்தூர், லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், உதய்பூர், சண்டிகர் மற்றும் மொஹாலி போன்ற பகுதிகளில் 20 லட்சம் சதுரடி அளவிலான கிரேட் ஏ மால்களை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது மால் ஆப்ரேட்டர் நிறுவனங்கள்.

பீனிக்ஸ் மில்ஸ்
மும்பை, புனே, பெங்களூர் ஆகிய நகரங்களில் 12க்கும் அதிகமான மால்-களை வைத்திருக்கும் பீனிக்ஸ் மில்ஸ் 2ஆம் தர நகரங்களில் ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கான டிமாண்ட் அதிகமாக இருக்கிறது என இந்நிறுவன தலைவர் ராஜேந்திரா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று
இதேவேளையில் கொரோனா தொற்றுக்குப் பின்பு ரீடைல் நிறுவனங்களின் வர்த்தகத் தாகம் அதிகரித்துள்ளதால் மால் மற்றும் முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் இருக்கும் கடைகளின் லீஸ் அளவு இந்த ஆண்டு முடிவதற்குள் கொரோனாவுக்கு முந்தைய அளவிட்டை தாண்டி கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் வரையில் வளர்ச்சியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமானம்
மேலும் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருக்கும் மக்களின் வருமானம் அதிகரித்துள்ள நிலையில் மால் வர்த்தகத்தின் அளவும், தேவையும் அதிகரித்துள்ளது என லூலூ குரூப் இந்தியாவின் ஷாப்பிங் மால் பிரிவு தலைவரான ஷிபு பிளிப்ஸ் தெரிவித்துள்ளார்.