லாக்டவுனிலும் பொருளாதார வளர்ச்சி.. டாப் 5ல் தமிழகமும் உண்டு.. ஹேப்பி அண்ணாச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் தற்போது வேகமெடுத்துள்ள நிலையிலும் கூட, பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

எனினும் இன்று தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 24,586 ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 197 ஆக அதிகரித்துள்ளது. இதே இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2,07,615 பேருக்கு உள்ள நிலையில், பலி எண்ணிக்கையானது 5,815 ஆக அதிகரித்துள்ளது.

 
லாக்டவுனிலும் பொருளாதார வளர்ச்சி.. டாப் 5ல் தமிழகமும் உண்டு.. ஹேப்பி அண்ணாச்சி..!

எனினும் லாக்டவுன் காலத்தில் இருந்து தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. அதிலும் இந்தியாவில் சிறந்த ஐந்து மாநிலங்களை பட்டியலிட்டுள்ளது ஒர் ஆய்வு.

எலாரா செக்யூரிட்டீஸ் இன்க் நடத்திய இந்த ஆய்வில், கேரளா, பஞ்சாப், தமிழகம், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் சென்று கொண்டு உள்ளனவாம். இந்த ஆய்வுக்காக மின்சார உபயோகம், போக்குவரத்து இயக்கம், மொத்த விற்பனை மையத்திற்கு விவசாய பொருட்களின் வருகை மற்றும் கூகுள் தரவு உள்ளிட்ட தரவுகள் எடுத்துக் கொள்ளபட்டதாக எலாரா செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கரீமா கபூர் தெரிவித்துள்ளார்.

இதே மற்ற முக்கிய தொழில் துறை மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில், பரவி வரும் கொரோனா பெருந்தொற்று நோயால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சாதாரண நடவடிக்கைகளை தொடங்குவதே இந்திய பொருளாதாரத்திற்கு சிறந்த தூண்டுதலாக இருக்கிறது என்றும் கபூர் கூறியுள்ளார்.

இதே பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாய செயல்பாடுகளில் தேவை அதிகரித்துள்ள நிலையில், மின்சார உபயோகம் அதிகரித்துள்ளது. இதே தலைநகர் டெல்லியிலும் மின்சார தேவை அதிகரித்துள்ளது. ஆக இதுவும் தேவை அதிகரிப்பையே சுட்டிக் காட்டுகிறது.

மேலும் நுகர்வோர் தங்கள் நுகர்வு முறையை புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு ஏதேனும் மாற்றியிருக்கிறார்களா? என்று கூகுளின் தேடல் போக்குகளை கபூர் ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த பகுப்பாய்வில் சலூன் சேவைகள், ஏர் கண்டிசனர்கள், விமான போக்குவரத்து, பைக்குகள், வாக்யூம் க்ளினர்கள், வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றை லாக்டவுன் காலத்தில் தேடியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதே லாக்டவுன் முதன் முறையாக செய்யப்பட்ட போது, ஹேர் ஆயில், சோப்புகள், லிக்யூட்கள், லேப்டாப், மொபைல் போன்கள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ பொருட்கள், இயர் போன்கள் உள்ளிட்டவற்றையும் ஆர்டர் செய்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karnataka and some states leading economy to recovery from lockdown

Karnataka, Tamilnadu, Haryana, Kerala Punjab states are leading economy to recovery from lockdown
Story first published: Wednesday, June 3, 2020, 19:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X