பெங்களூரையும் தொற்றிக் கொண்ட கொரோனா பயம்.. ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுரை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் குறித்து மக்கள் பீதியடைந்துள்ள இந்த நிலையில், 28,500- க்கும் மேற்பட்டோர் கண்கானிப்பில் உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்புடன் பேருந்தில் பயணம் செய்த இளைஞர் | Bengaluru: Corona Affected guy travelled in Bus
 

மேலும் தற்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைவரும் கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஊழியர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு, கர்நாடக அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நிறுவனங்களுக்கு அறிவுரை

நிறுவனங்களுக்கு அறிவுரை

மேலும் காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ள ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்படலாம். குறிப்பாக நகரப்பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் இதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களை கை சுகாதாரம் உள்ளிட்ட ஆலோசனைகளையும் வழங்கி வீட்டில் இருந்து பணிபுரிய செய்யலாம் என்றும் கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

பயணம் வேண்டாம்

பயணம் வேண்டாம்

மேலும் அவர்கள் கோவிட் 19 பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கூறியுள்ளது. குறிப்பாக சீனா, ஈரான், தென் கொரியா, இத்தாலி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்வதை மக்கள் தவிர்க்கவும் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஊழியர்களையும் கண்கானியுங்கள்
 

ஊழியர்களையும் கண்கானியுங்கள்

சீனா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஹாங்காங்க், மலேசியா, ஹாங்காங், மக்காவ், இந்தோனேசியா, நேபாளம், தாய்லாந்து, சிங்கப்பூர், தைவான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடை செய்யப்பட்ட நாடுகளைத் தவிர, மற்ற பகுதிகளில் இருந்து வரும் ஊழியர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

சுகாதாரத்தினை மேம்படுத்துங்கள்

சுகாதாரத்தினை மேம்படுத்துங்கள்

மேலும் வழக்கமான வேலை செய்யும் இடங்களில் ஊழியர்களை முழுமையான கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள ஊக்குவிக்கவும். அதிலுல் வைரஸ்களை கட்டுப்படுத்தும் ஹேண்டு வாஸ்களை கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்யவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் நல்ல சுகாதாரத்தை ஊக்குவிக்கவும், பணியிடங்களில் முகமூடிகள் மற்றும் டிஸ்யூ பேப்பர்கள் கிடைப்பதையும் உறுதி செய்யவும் என்றும் நிறுவனங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karnataka govt asked Bangalore IT firms to allow employees to work from home

The Karnataka government advised city based companies to allow their employees to work from home, if they any symptoms of like flu.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X