இந்த வேகமான வாழ்க்கை முறையில் பலரும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்யும் பணியில் சற்றும் விருப்பம் இல்லாமல் உள்ளனர்.
இந்த நிலையில் பலர் பல புதிய புதிய வர்த்தகத்தையும் பணிகளையும் செய்து பெரும் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். ஒரு காலத்தில் டிக்டாக் வீடியோ மூலம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம் முடியுமா.. ஆனால் ஷாட் வீடியோ மூலம் பலர் பிரபலம் ஆனது மட்டும் அல்லாமல் பல லட்சம் ரூபாயை சம்பாதித்து வருகின்றனர்.
அதை போலவே ஐடி வேலையைத் தூக்கி எறிந்து கழுதை பால் விற்கும் ஸ்ரீநிவாஸ் பல லட்சம் வருமானத்தைப் பெற்று அசத்தியுள்ளார்.
ரெசிஷனுக்கு பயப்படாத இந்திய ஐடி நிறுவனங்கள்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

வெற்றி பாதை
வெற்றிக்கான பாதையைச் சொந்தமாகவும், புதிதாகவும் உருவாக்குவதில் தனி த்ரில் இருக்கு என்றாலும், கடுமையான உழைப்பு, அதிகப்படியான ரிஸ்க் முதலியவற்றை எடுக்க வேண்டியது கட்டாயம். இந்த கடினமான கட்டத்தைக் கடந்தால் கட்டாயம் மிகப்பெரிய லாபம் இருக்கும் என்பதை நிரூபித்துள்ளார் ஒருவர்.

ஸ்ரீநிவாஸ் கவுடா
கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா என்பவர் ஜூன் 8ஆம் தேதி முதல் முறையாக இம்மாநிலத்தில் கழுதை பண்ணை துவங்கியுள்ளது. ஸ்ரீநிவாஸ் கவுடா துவங்கியுள்ள கழுதை பண்ணை இந்தியாவில் 2வதாகும், 1வது கழுதை பண்ணை கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் பகுதியில் உள்ளது.

சாப்ட்வேர் நிறுவன பணி
பிஏ பட்டதாரியான ஸ்ரீநிவாஸ் கவுடா 2020 வரையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், வேலையை விட்டு இரா என்னும் கிராமத்தில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் ஈசிரி பார்ம்ஸ் என்பதை துவங்கினார்.

ஆடு, முயல், கோழி
முதலில் ஆடு மட்டுமே வளர்த்த ஸ்ரீநிவாஸ் கவுடா ஆரம்பம் முதலே சிறப்பான இனப் பெருக்கத்தைக் கண்டார், இதைத் தொடர்ந்து முயல் மற்றும் கடக்நாத் கோழிகளை வளர்க்கத் துவங்கினார். இவற்றின் வளர்ப்பில் கிடைத்த அனுபவம் மற்றும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்டத்திற்குச் செல்ல துவங்கினார் ஸ்ரீநிவாஸ் கவுடா.

கழுதை வளர்ப்பு
ஸ்ரீநிவாஸ் கவுடா தனது 2.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஈசிரி பார்ம்ஸ்-ல் பெரும் பகுதியைக் கழுதை வளர்ப்புக்கு ஒதுக்கி 20 கழுதைகளை வாங்கினார். இந்தியாவில் கழுதைகள் எண்ணிக்கையும், கழுதை வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருக்கிறது.

பால் விற்பனை
ஆனால் கழுதை பால் விரும்பத்தக்க, விலையுயர்ந்த மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்து உள்ளது. இதில் இருக்கும் வர்த்தகத்தை உணர்ந்த ஸ்ரீநிவாஸ் கழுதை எண்ணிக்கையை அதிகரித்துப் பால் விற்பனையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தார்.

ஒரு பாக்கெட் 150 ரூபாய்
இதன் படி ஸ்ரீநிவாஸ் தற்போது 30 மில்லி கழுதை பால் கொண்ட பாக்கெட்-ஐ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யத் துவங்கியுள்ளார். மேலும் வர்த்தகத்தைப் பெரிய அளவிலும் வேகமாகவும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக மால், சூப்பர்மார்கெட் என மக்கள் அதிகம் கூடும் இடத்தில் விற்பனை செய்து வருகிறார்.

17 லட்சம் ரூபாய்
இதுவரை ஸ்ரீநிவாஸ் கவுடா கழுதை பால்-க்கு மட்டும் சுமார் 17 லட்சம் ரூபாய்க்கு ஆர்டர்களைப் பெற்று இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இவரது வெற்றி பிரமிப்பாக இருந்தாலும் பலருக்கு வர்த்தகத்தைத் துவங்கி முன்மாதிரியாகவும் இருக்கிறார்.