இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாதது.. காய்கறிகளுக்கு அடிப்படை விலை.. அசத்திய கேரள முதல்வர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவனந்தபுரம்: காய்கறிகளுக்கு அடிப்படை விலையை நிர்ணயிக்கும் முதல் மாநிலமாக கேரளா மாறி உள்ளது., இது உற்பத்தி செலவை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இந்த திட்டம் நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும், என்றார்.

விவசாயிகள் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

காய்கறிகளுக்கு விலையை நிர்ணயிக்கும் திட்டத்தை ஆன்லைனில் அறிமுகப்படுத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன் , கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 16 வகையான காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றார்.

காய்கறிகளுக்கு அடிப்படை விலை

காய்கறிகளுக்கு அடிப்படை விலை

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்க நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் இத்தகைய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலை காய்கறிகளின் உற்பத்தி செலவை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். சந்தை விலை இதைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும், விவசாயிகளிடமிருந்து அடிப்படை விலையில் பொருட்கள் வாங்கப்படும். காய்கறிகளின் தரத்தின் அடிப்படையில் அதன் விலைகள் நிர்ணயிக்கப்படும்.

விவசாயிகளுக்கு ஆதரவு

விவசாயிகளுக்கு ஆதரவு

நாடு முழுவதும் விவசாயிகள் திருப்தி அடையவில்லை ... ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளாக நாங்கள் அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறோம்.
மாநிலத்தில் விவசாய வளர்ச்சியை முதன்மையான இலக்காகக் கொண்ட கேரள அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

எப்படி பதிவு செய்வது

எப்படி பதிவு செய்வது

முதல் கட்டத்தில் 16 வகையான காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படை விலையை சரிசெய்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த திட்டப்படி ஒரு பருவத்திற்கு அதிகபட்சம் 15 ஏக்கர் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிக்கு பயனளிக்கும். அடிப்படை விலையின் பயனைப் பெறுவதற்காக பயிர் காப்பீடு செய்த பின்னர் விவசாயிகள் நவம்பர் 1 முதல் வேளாண் துறைகள் பதிவு போர்ட்டலில் பதிவு செய்யலாம், என்றார்.

குளிரூட்டப்பட்ட வாகனங்கள்

குளிரூட்டப்பட்ட வாகனங்கள்

குளிர் சேமிப்பு வசதிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் போன்ற முழு விநியோக சங்கிலி செயல்முறைகளையும் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கும் இந்த திட்டம் திட்டமிட்டுள்ளது.

15 ஏக்கர் விவசாயிகள்

15 ஏக்கர் விவசாயிகள்

சந்தை விலை இதைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும், விவசாயிகளிடமிருந்து அடிப்படை விலையில் பொருட்கள் வாங்கப்பபடும். காய்கறிகளின் தரம் மற்றும் தரத்தின் விலைப்படி தரப்படுத்தப்படும். இந்த திட்டத்தில் உள்ளூர் அரசு (எல்.எஸ்.ஜி) அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும், ஏனெனில் அவை காய்கறி கொள்முதல் மற்றும் விநியோகத்தை ஒருங்கிணைக்கும். இந்த திட்டத்தின்படி ஒரு பருவத்திற்கு அதிகபட்சம் 15 ஏக்கர் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறலாம்.

ஒரு லட்சம் டன்

ஒரு லட்சம் டன்

கேரளாவில் காய்கறி உற்பத்தி கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏழு லட்சம் டன்னிலிருந்து 14.72 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு காய்கறிகள் மற்றும் கிழங்கு பயிர்கள் ஒவ்வொன்றும் கூடுதலாக ஒரு லட்சம் டன் உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு" இவ்வாறு கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kerala became the first state to fix the floor price for vegetables

Kerala became the first state to fix the floor price for vegetables, which would be 20 per cent above the production cost, Chief Minister Pinarayi Vijayan said here on Tuesday. The scheme would come into effect from November 1.
Story first published: Tuesday, October 27, 2020, 20:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X