2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் கேரள அரசு மக்களுக்கு அதிவேக இண்டர்நெட் இணைப்பைக் குறைந்த கட்டணத்தில் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்தின் மூலம் கேரளாவில் இருக்கும் 30,000 அரசு அமைப்புகள் இலவசமாக WIFI இணைப்பைப் பெறும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள அரசு தற்போது KFON என்கிற கேரள பைபர் ஆப்டிக் நெட்வொர்க் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாகத் தான் சுமார் 20 லட்சம் கேரள குடும்பங்கள் அதிவேக இண்டர்நெட் சேவையைப் பெற உள்ளது.
சசிகலாவின் பினாமி என சொத்துக்கள் முடக்கம்.. வருமான வரித் துறைக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

முற்றிலும் இலவசம்
KFON திட்டத்தின் மூலம் கேரள அரசு வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் 20 லட்ச குடும்பங்களுக்கு இலவசமாக இண்டர்நெட் சேவை கொடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளது.
கேரள அரசின் இந்தி மிகப்பெரிய டிஜிட்டல் கனவை நினைவாக்கும் KFON திட்டத்தின் மொத்த மதிப்பு 1,548 கோடி ரூபாய். இத்தொகையை ஏற்கனவே கேரள அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி
KFON திட்டம் கேரள மாநில மின்சார வாரியம் மற்றும் கேரள மாநிலத்தின் ஐடி கட்டமைப்பு நிறுவனங்களின் கூட்டணியில் செயல்படுகிறது. இந்த 1,548 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைப் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் கைப்பற்றியுள்ள நிலையில், இத்திட்டத்தை BEL நிறுவனம் தான் செயல்படுத்தப் போகிறது.
கேரள மாநில மின்சார வாரியத்தின் உதவியுடன் கேரளாவில் தெற்கு மேற்கு முனையை இணைக்கும் மின்சார வழித்தடத்தைப் பயன்படுத்திக் கேரள மக்களுக்கு இண்டர்நெட் சேவையைக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

95 சதவீத மக்கள்
KFON திட்டத்தின் அடிப்படைய தற்போது இருக்கும் மின்சார வழித்தடத்தைப் பயன்படுத்திக் கேரளா முழுவதும் பைபர் ஆப்டிக் நெட்வொர் அமைத்து, மாநிலம் முழுவதும் WIFI சேவை கிடைக்கும் வழி செய்வது தான்.
கேரள மின்சாரம் வாரியம் 95 சதவீத மக்களையும் வீடுகளையும் இணைந்துள்ளதால் இத்திட்டத்தில் இத்துறையும் சேர்க்கப்பட்டுள்ளது எனக் கேரள அரசு அதிகாரிகள் விளக்கம் கொடுக்கின்றனர்.

இலவச லேப்டாப்
இவை அனைத்திற்கும் மேலாகக் கேரள மாநில பைனான்சியல் எண்டர்பிரைசர்ஸ் உடன் குடும்பஸ்ரீ மற்றும் இதர அமைப்பு சேர்ந்து வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கவும் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் கேரளாவில் இருக்கும் டிஜிட்டல் இடைவெளியைத் தீர்க்க முடியும் எனக் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசாக் தெரிவித்துள்ளார்.
சேட்டா சூப்பரு..!