ஐபோன் வாங்க துபாய் பறந்த கேரள இளைஞன்.. டிரெண்டாகும் போட்டோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 14 சீரியஸ் ஐபோனை வாங்குவதற்காக துபாய் சென்றுள்ளார்.

 

இந்தியாவில் இன்னும் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் வெளியாகாத நிலையில் இந்த போனை அவர் துபாயில் சென்று குறைவான விலையில் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோனை வாங்குவதற்காக அவர் கூடுதலாக விமான பயணம் மற்றும் தங்கும் செலவாக 41 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 14-க்கு இவ்வளவு வரியா.. ஆடிப்போன இந்தியர்கள்..?! ஐபோன் 14-க்கு இவ்வளவு வரியா.. ஆடிப்போன இந்தியர்கள்..?!

கேரள இளைஞர்

கேரள இளைஞர்

கேரளாவை சேர்ந்த 28 வயது இளைஞர் தீரஜ் என்பவர் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் ஐபோன் 14 வெளியிடுவதற்கு முன்பு துபாயில் இருந்து இரண்டு ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்களை வாங்கியுள்ளார். கொச்சியை சேர்ந்த இந்த இளைஞர் ஒரு ஆப்பிள் ஐபோன் ரசிகர் என்பதும், ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக துபாய்க்கு அவர் செல்வது இது நான்காவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

துபாயில் ஆப்பிள் ஐபோன்

துபாயில் ஆப்பிள் ஐபோன்

சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் போனை முன்பதிவு செய்ததால், சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதால் அவர் துபாய் சென்று தனக்கு விருப்பமான ஆப்பிள் ஐபோனை வாங்கியுள்ளார். மேலும் ஒவ்வொரு முறையும் ஆப்பிள் ஐபோனின் புதிய மாடல் வெளியாகும்போது தீரஜ் தங்கள் கடைக்கு வருவார் என கடையின் மேலாளர் அஹமத் ஹசிப் தெரிவித்துள்ளார்.

பேரார்வம்
 

பேரார்வம்

தீரஜ் முதல் முறையாக 2017ஆம் ஆண்டு ஐபோன் 8 வெளியான போது அந்த போனை வாங்குவதற்காக துபாய் சென்றார். அதன் பின் அவர் 2019 மற்றும் 2021ஆம் ஆண்டிலும் அப்போது வெளியான புதிய மாடல்களை வாங்க அவர் துபாய் சென்றார். ஆப்பிள் ஐபோன் மீது பேரார்வம், வெறி, கனவுகள் இவை அனைத்தையும் கொண்டிருக்கும் தீரஜ், துபாய் செல்லும் செலவு குறித்து கவலைப்படுவதில்லை.

இரண்டு ஐபோன்கள்

இரண்டு ஐபோன்கள்

செப்டம்பர் 15 அன்று மாலை விமானத்தில் துபாய் சென்ற தீரஜ், மறுநாள் காலை ஐபோன் விற்பனை செய்யும் கடைக்கு சென்று 512 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இரண்டு ஐபோன்களை வாங்கினார். இதற்காக அவர் ரூ.2.40 லட்சம் செலவு செய்துள்ளார்.

பயண செலவு

பயண செலவு

மேலும் விமானப்பயணம், விசா செலவுகள் மற்றும் தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கு அவர் ரூ.41,000 செலவு செய்துள்ளார். தீரஜ் சிறுவயதில் இருந்தே ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் ரசிகர் என்றும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் துபாய் சென்று ஐபோன் வாங்குவதாகவும், பணம் செலவு செய்வது குறித்து கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

துபாய்

துபாய்

மேலும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் வாங்குவதற்கு சிங்கப்பூர், ஹாங்காங் அல்லது அமெரிக்காவிற்கு செல்லலாம் என்றும், ஆனால் தனக்கு துபாய் மீதான பற்றுதல் காரணமாக ஒவ்வொரு முறையும் துபாயில் வாங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kerala man buy Apple iPhone in Dubai, How much he spend more money?

Kerala man buy Apple iPhone in Dubai, How much he spend more money? | ஐபோன் வாங்குவதற்காக ரூ.41,000 கூடுதலாக செலவு செய்த கேரள இளைஞர்: காரணம் இதுதான்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X