தென் கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகமாகி வெறும் 16 மாதங்கள் மட்டுமே முடிந்த நிலையில் சுமார் 1 லட்சம் கனெக்டெட் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
அப்படி இந்தக் கனெக்டெட் கார்களில் என்ன ஸ்பெஷல்.. வாங்க பார்ப்போம்.
கியா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்யும் இரண்டு கார்களில் ஒன்று கியாவின் UVO கனெக்ட் சிஸ்டம் கொண்ட கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த UVO கனெக்ட் சிஸ்டம் மூலம் கார் மற்றும் காரின் இன்போசிஸ்டத்தை ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் மூலம் இணைத்துக்கொள்ள முடியும்.
இதுக்குறித்துக் கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கியா மோட்டார்ஸ் கடந்த 16 மாதத்தில் விற்பனை செய்ய மொத்த கார்களில் 55 சதவீத கார்கள் UVO கனெக்ட் சிஸ்டம் கொண்ட கனெக்டெட் கார்கள். இப்பிரிவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் செல்டோஸ் GTX ப்ளஸ் DCT 1.4T பெட்ரோல் மாடல், இந்தக் குறிப்பிட்ட மாடல் கார் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 15 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகிறது எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வர்த்தகம் துவங்கிய நாள் முதல் எங்களுடைய முக்கிய இலக்கு டெக்னாலஜி தான், 1 லட்சம் கனெக்டெட் கார்களை விற்பனை செய்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் எனக் கியா மோட்டார்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி Kookhyun Shim தெரிவித்துள்ளார்.
இன்றைய இண்டர்நெர் தலைமுறையினருக்கு ஒரு கார் என்பது அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்திச் செய்யும் ஒரு extension ஆக இருக்க வேண்டும், இதில் கனெக்ட்விட்டி மிகலும் முக்கியம். கியாவின் UVO கனெக்ட் சிஸ்டம் பல ஸ்மார்ட் கருவிகளுடன் எளிதாக இணைக்க முடியும், இதுமட்டும் அல்லாமல் மக்களுக்குச் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கிறது கியா மோட்டார்ஸ்
இந்த UVO கனெக்ட் சிஸ்டம் மூலம் வாய்ஸ் கமெண்ட் மூலம் கால் செய்வது, பருவநிலை தகவல், நேரம், நாள், இந்தியாவில் விடுமுறை நாட்கள், கிரிக்கெட் ஸ்கோர், மீடியோ கன்ட்ரோல், நேவிகேஷன் கன்ட்ரோல் மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் என அனைத்தையும் நிர்வாகம் செய்ய முடியும்.