பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான குமார் மங்கலம் பிர்லா-வின் பிள்ளைகள் ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடைல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர உள்ளனர்.

 

இந்நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி அனன்யா பிர்லா மற்றும் ஆர்யமான் விக்ரம் பிர்லா ஆகியோர் ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடைல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற உள்ளதாகவும், அவர்களின் இளம் தலைமுறைக்கான நுண்ணறிவு மற்றும் வணிகத் திறன்களை வர்த்தகத்தில் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பிர்லா குழுமமும் வாரிசு கைகளுக்கு மாறத் தயாராகியுள்ளது.

Padma Awards 2023: குமார் மங்கலம் பிர்லா முதல் அரீஸ் கம்பட்டா வரையில்.. தொழில்துறையினருக்கு மகுடம்! Padma Awards 2023: குமார் மங்கலம் பிர்லா முதல் அரீஸ் கம்பட்டா வரையில்.. தொழில்துறையினருக்கு மகுடம்!

வர்த்தகக் குழுமங்கள்

வர்த்தகக் குழுமங்கள்

இந்தியாவில் அனைத்து முன்னணி வர்த்தகக் குழுமங்களும் நியூ ஏஜ் டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், ஈகாமர்ஸ் நிறுவனங்கள் உடன் போட்டி போடவும், தனது வர்த்தகத்தையும், ஆதிக்கத்தையும் நிலை நிறுத்திக்கொள்ள வர்த்தகத் தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்கு மிகவும் சிறு வயதிலேயே முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டு நிர்வாகத்தில் உட்கார வைக்கப்படுகின்றனர்.

ரிலையன்ஸ், அதானி, டாடா

ரிலையன்ஸ், அதானி, டாடா

இந்த நிலையில் ரிலையன்ஸ், அதானி, டாடா, டிவிஎஸ், எஸ்பி குரூப் என நாட்டின் முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களைத் தொடர்ந்து இப்பட்டியலில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா-வும் இணைந்துள்ளார். இளம் தலைமுறையினரை நிர்வாகப் பொறுப்புக்குக் கொண்டு வந்த அனைத்து நிறுவனமும் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை என்றாலும் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு உள்ளது உறுதியாகியுள்ளது.

அனன்யா பிர்லா மற்றும் ஆர்யமான் பிர்லா
 

அனன்யா பிர்லா மற்றும் ஆர்யமான் பிர்லா

இந்த நிலையில் குமார் மங்கலம் பிர்லா தலைமையிலான ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடைல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர உள்ள அனன்யா பிர்லா மற்றும் ஆர்யமான் விக்ரம் பிர்லா ஆகியோர் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன..?

அனன்யா பிர்லாவின் பிஸ்னஸ்

அனன்யா பிர்லாவின் பிஸ்னஸ்

குமார் மங்கலம் பிர்லா-வின் மகள் அனன்யா பிர்லா-வுக்கு, தற்போது 28 வயதாகிறது. ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின் பிரைவேட் லிமிடெட் என்ற முதல் பின்டெக் நிறுவனத்தை நிறுவியபோது, அவருக்கு வெறும் 17 வயது.

1 பில்லியன் டாலர்

1 பில்லியன் டாலர்

அனன்யாவின் நிறுவனம், நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் AUM அளவு 1 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இந்நிறுவனம் 2015-2022 வரையிலான காலக்கட்டத்தில் CAGR அளவு 120 சதவிகிதமாக உள்ளது.

பிற திறமைகள்

பிற திறமைகள்

அனன்யா பிர்லா-வுக்குப் பாட்டு பாடும் திறமைக்குப் பெயர்போனவர், இதேபோல் வீட்டு அலங்கார பிராண்டான Ikai Asai-யின் நிறுவனர் ஆவார். மேலும் இந்தியாவில் மனநலம் மேம்பாடு தொடர்பாக Mpower என்னும் நிறுவனத்தை இணைந்து உருவாக்கினார்.

ஆர்யமான் பிர்லா

ஆர்யமான் பிர்லா

குமார் மங்கலம் பிர்லா-வின் ஒரே மகனான ஆர்யமான் பிர்லா ஆதித்யா பிர்லா குழுமத்தின் பல வணிகங்களில் ஏற்கனவே பணியாற்றியுள்ளார். நியூ ஏஜ் வணிகங்களுள் பிர்லா குழுமம் நுழைய உதவி செய்யும் நிர்வாகக் குழுவின் ஒரு பகுதியாக உள்ளார்

D2C பிரிவு வர்த்தகம்

D2C பிரிவு வர்த்தகம்

ஆர்யமான் பிர்லா இருக்கும் குழு தான் ஆதித்யா பிர்லா குழுமத்தின் D2C தளமான TMRW ஐ உருவாக்கவும், சந்தைப்படுத்தவும் உதவியது. ஆர்யமான் இக்குழுமத்தின் வென்ச்சர் கேபிட்டல் பண்ட் நிறுவனமான ஆதித்யா பிர்லா வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கும் தலைமை தாங்கி இயக்கி வருகிறார். ஆர்யமான் பிர்லா ஒரு கிரிக்கெட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kumar Mangalam Birla gave way to daughter Ananya birla and son Aryaman birla

Kumar Mangalam Birla gave way to daughter Ananya birla and son Aryaman birla
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X