இந்தியாவில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்தும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அன்னிய முதலீட்டு நிறுவனங்களுக்கு அதிகளவிலான சலுகையை அறிவித்து வருகிறது.
உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பது மத்திய அரசின் திட்டம். வேலைவாய்ப்பு உருவாக்குவதன் மூலம் நாட்டின் வர்த்தகச் சந்தையும் பொருளாதாரம் அதிகரிக்கும் என்பதே இதன் பின் இருக்கும் அடிப்படை காரணம்
இந்த வகையில் இந்தியாவின் 100 வருடப் பழமையான ரயில்வே போக்குவரத்தை தலைகீழாக மாற்றப்படும் புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியை எல்&டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மாஸ் காட்டும் போன்பே.. தங்கத்தில் டக்கரான பிஸ்னஸ்..!

7000 கோடி ரூபாய்
மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் அமைக்கப்படும் புல்லட் ரயில் திட்டத்தில் ஒரு பகுதியின் கட்டுமான திட்டத்தை எல்&டி நிறுவனம் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மதிப்பு மட்டும் சுமார் 7000 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எல்&டி நிறுவனம் வியாழக்கிழமை வெள்யிட்டுள்ளது.

87.56 கிலோமீட்டர்
நேஷனல் ஹைய் ஸ்பீடு ரெயில் கார்ப் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட இத்திட்டத்தின் சரியான மதிப்பீட்டை எல்&டி நிறுவனம் தெரிவிக்காத நிலையில் தோராயக் கணிப்பில் அறிவித்துள்ளது.
மும்பை - அகமதாபாத் வழித்தட (MAHSR) திட்டத்தின் ஒரு பகுதியான 87.56 கிலோமீட்டர் ரயில்வே பாதையை அமைக்கும் திட்டத்தைத் தான் தற்போது எல்&டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கட்டுமானம்
இந்த 87.56 கிலோமீட்டர் ரயில்வே பாதையில் ஒரு ரயில்வே ஸ்டேஷன், ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்படும் பாலம், maintenance depot, மலைக்குள் நுழைந்து செல்லும் ducts வழிப்பாதை மற்றும் இதர கட்டுமானங்களும் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை - அகமதாபாத் வழித்தட திட்டம்
சுமார் 508 கிலோமீட்டர் நீண்ட வழித்தட திட்டமான மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் மகாராஷ்டிரா, தாரா, நகர் ஹவேலி, குஜராத் பகுதிகளைச் சுமார் 12 ரயில்வே நிலையங்கள் மூலம் இணைக்கப்படுகிறது
இந்தத் திட்டம் முடிவடையும் போது இத்தடத்தில் இயக்கப்படும் புல்லட் ரயில் மணிக்கு 302 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும், மும்பையில் இருந்து அகமதாபாத்-ஐ வெறும் 2 மணிநேரத்தில் சென்றடைய முடியும்.