ஊழியர்கள் பணி நீக்கமா.. சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா.. இதையும் தெரிஞ்சு வச்சிக்கோங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல நிறுவனங்கள் மிகப்பெரியளவில் பணி நீக்கம் என்பதை செய்துள்ளன. குறிப்பாக இந்த பணி நீக்கம் என்பது ஐடி துறை மற்றும் எட்டெக் துறையில் அதிகளவில் காணப்படுகின்றது. இன்னும் இந்த போக்கானது சில காலத்திற்கு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இது குறித்து மத்திய தொழிலாளார் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், தொழிலாளர் சட்டத்தின் படி பணி நீக்க நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் அது சட்டவிரோதமான பணி நீக்கமாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸ்..ஒயின், கார் நிறுவனங்கள் IPO..முக்கிய விவரங்கள் இதோ!சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸ்..ஒயின், கார் நிறுவனங்கள் IPO..முக்கிய விவரங்கள் இதோ!

 பணி நீக்கம் பற்றி தெரியுமா?

பணி நீக்கம் பற்றி தெரியுமா?

கடந்த சில மாதங்களாக ஐடி துறை, சமூக வலைதள நிறுவனங்கள், கல்வித் துறை சார்ந்த ஸ்டார்ட் அப்கள் என பலவும் பெரியளவில் பணி நீக்கம் செய்து வருகின்றன. பல்வேறு வெளி நாட்டு நிறுவனங்கள் மட்டும் அல்லாது, இந்திய நிறுவனங்கள் பலவும் பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்த மிகப்பெரிய பணி நீக்கங்கள் பற்றி அரசு அறிந்துள்ளதா? என்பது பற்றி ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு யாதவ் பதிலளித்துள்ளார்.

பணி நீக்கம் சட்ட விரோதமானதா?

பணி நீக்கம் சட்ட விரோதமானதா?

தொழில்துறை நிறுவனங்களில் பணி நீக்கம் மற்றும் ஆட்குறைப்பு தொடர்பான விஷயங்கள், தொழிலாளர்கள் தகறாறு சட்டம் 1947 -கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் இதன் மூலம் இழப்பீடு பெறலாம்.

ஆக மேற்கண்ட சட்டத்தின் படி, செய்யப்படாத எந்த பணி நீக்கமும் சட்டவிரோதமானது என கூறப்படுகிறது. இது பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இழப்பீடு பெறுவதற்கான உரிமையையும் வழங்குகிறது. அதோடு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது.

மாநில அரசுகளே பராமரிப்பு

மாநில அரசுகளே பராமரிப்பு

தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக வலைதளங்கள் மற்றும் தொடர்புடைய சில துறைகளில் உள்ள பல தேசிய மற்றும் இந்திய நிறுவனங்கள் தொடர்பான விஷயங்களில், அந்தந்த மாநிலங்களிடமே அதிகார வரம்பு என்பது உள்ளது. ஆக ஆட்குறைப்பு குறித்து மத்திய அரசிடம் எந்த தரவுகளும் பராமரிக்கப்படவில்லை என்றும் யாதவ் தெரிவித்துள்ளார்.

சட்டத்தில் இடமுண்டு

சட்டத்தில் இடமுண்டு

ஆக தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் அந்த சட்டத்தில் இடமுண்டு. இதன் அடிப்படையில் தான் மத்திய மாநில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வரம்பில் உள்ள நிறுவனங்களில், ஆட்குறைப்பு, தொழில் துறை உறவுகளை சரியாக பேணுவதற்கும் CIRM அமைப்பு உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

labour Minister on job cuts in IT and ed tech start ups: Bhupender yadav

Matters relating to dismissal in industrial establishments are governed under the Labor Disputes Act, 1947. Workers can get compensation through this
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X