முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கெளதம் அதானிக்கு தலைமையிலான அதானி பவர் நிறுவனங்களுக்கு இடையே லான்கோ அமர்கண்டக் பவர் சொத்துகளை வாங்குவதற்குக் கடுமையான போட்டி உருவாகியுள்ளது.
லான்கோ அமர்கண்டக் பவர் நிறுவனம் திவால் நிலையில் உள்ளதால் இந்த அனல் மின் நிலையத்தின் சொத்துக்களை நவம்பர் 25ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
முகேஷ் அம்பானி, கெளதம் அதானி
இந்த ஏலத்தில் நாட்டின் இரு பெரும் தொழிலதிபர் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார உற்பத்தியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி பவர் ஆகியவை அதிகளவில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் போட்டி கடுமையாக இருக்கப் போகிறது.
பவர் பைனான்ஸ் கார்ப் மற்றும் REC
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கெளதம் அதானிக்கு தலைமையிலான அதானி பவர் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பவர் பைனான்ஸ் கார்ப் மற்றும் REC லிமிடெட் கூட்டணியும் லான்கோ அமர்கண்டக் பவர் சொத்துகளை வாங்கு போட்டிப்போடுகிறது.
போட்டி
மத்திய அரசுக்கு சொந்தமான பவர் பைனான்ஸ் கார்ப் மற்றும் REC லிமிடெட் கூட்டமைப்பும் ஏலச் செயல்பாட்டில் பங்கேற்பது மட்டும் அல்லாமல் லான்கோ அமர்கண்டக் பவர் நிறுவனத்தில் ஏற்கனவே இக்கூட்டணி 41 சதவீத பங்குகளை PFC மற்றும் REC கூட்டாக வைத்துள்ளது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லான்கோ அமர்கண்டக் பவர் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலத்தில் வெற்றி பெற்றால், அனல் மின் துறையில் இந்நிறுவனம் முதல் முறையாக நுழைய உள்ளது. மின்சாரத் துறை நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப வளரும் வாய்ப்புகள் உள்ளதால் நாட்டின் முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் அனைத்தும் இத்துறையில் இறங்கி வருகிறது.
லான்கோ அமர்கண்டக் பவர்
லான்கோ அமர்கண்டக் பவர் நிறுவனத்தின் ரிசல்யூஷன் செயல்முறையின் முதல் சுற்றில் அதிக ஏல தொகையை அறிவித்தது முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதானி பவர்
ஆனால் அதானி பவர் இரண்டாவது சுற்றில் ரூ.2,950 கோடிக்கு ஏலம் எடுத்து முதல் இடத்தைப் பிடித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ. 2,000 கோடிக்கு ஏலத்தைச் சமர்ப்பித்துள்ளது, அதே நேரத்தில் PFC-REC இணைத்தல் 10-12 ஆண்டுகளில் செலுத்துவதாக ரூ.3,870 கோடி வழங்குவதாக அறிவித்தது.
அடிப்படை விலை
இரண்டாவது சுற்றுக்குப் பிறகு அதானி பவர் அதிக விலைக்கு ஏலம் எடுத்ததால், லான்கோ அமர்கண்டக் பவர் நிறுவனத்தின் நவம்பர் 25 ஏலத்திற்கான அடிப்படை விலை ரூ. 2,950 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கரில் உள்ள கோர்பா-சம்பா மாநில நெடுஞ்சாலையில் நிலக்கரி அடிப்படையில் இயங்கும் அனல் மின் தொழிற்சாலையை லான்கோ நடத்தி வருகிறது. லான்கோ இத்தொழிற்சாலையின் முதல் கட்டத்தை மட்டுமே செயல்படுத்தி இயக்கி வந்தது. இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மூன்றாம் கட்டப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்குள் லான்கோ திவாலாகியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications