லேயர் ஷாட் என்ற நிறுவனத்தின் பாடி ஸ்ப்ரே விளம்பரங்கள் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த இரண்டு விளம்பரங்களிலும் பெண்களை அவமதிப்பது போல் இருப்பதாகவும் பாலியல் வன்முறையை ஊக்குவிப்பது போல் இருப்பதாகவும் மகளிர் அமைப்புகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தன.
இதனை அடுத்து இந்த விளம்பரத்தை உடனடியாக நிறுத்த மத்திய அரசு தடை விதித்தது. அதுமட்டுமின்றி யூடியூப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இந்த விளம்பரம் ஒளிபரப்பக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
பாடிஸ்ப்ரே விளம்பரத்தை இப்படியா எடுப்பாங்க? தடை விதித்தது மத்திய அரசு

விளம்பரங்கள்
பாலியல் வன்முறையை தூண்டும் வகையாகவும், பெண்களை அவமதிப்பது போன்றும் உள்ள இந்த விளம்பரங்களை எடுத்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க டெல்லி காவல்துறை மற்றும் இந்திய விளம்பர தர நிலை கவுன்சில் முடிவு செய்தது என்பதையும் பார்த்தோம்.

மன்னிப்பு
இந்த நிலையில் தங்களது இரண்டு விளம்பரமும் பெரும் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து லேயர் ஷாட் நிறுவனம் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கலாச்சாரம்
எங்களது விளம்பரங்கள் உரிய ஒப்புதலுக்கு பின்னரே ஒளிபரப்பப்பட்டது. எங்களுக்கு யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. பெண்கள் குறித்து அவமதிப்பு செய்வதும் எங்களது நோக்கம் அல்ல. கலாச்சாரம் என்பது ஒருசிலரால் தவறாக கருதப்படுகிறது.

முடிவுக்கு வருமா?
இருப்பினும் தனிநபர்கள் மற்றும் பல சமூகங்கள் இடையே இந்த விளம்பரங்கள் கோபத்தை ஏற்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வருமா ?அல்லது லேயர் ஷாட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.