வேலை போயிடுச்சா.. கவலைபடாதீங்க.. ஈஸியா புதிய வாய்ப்புகளை பெறலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய மாதங்களாகவே பணி நீக்கம் குறித்தான செய்திகள் என்பது அடிக்கடி வெளியாகிய வண்ணம் இருக்கிறது. பணி நீக்கமே இல்லாத நிறுவனங்களில் உள்ள ஊழியர்களை பதற்றமடைய செய்யும் அளவுக்கு செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

உண்மையில் பணி நீக்கத்தில் வலி என்பது அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஏனெனில் பணி நீக்கம் செய்யப்பட்டவரோடு, அவரது குடும்பத்தினரையும் சேர்த்து இது பாதிக்கும். அவர்கள் அடுத்ததாக புதியதொரு வேலை தேடி, அடுத்த சம்பளம் வாங்குவதற்குள் அந்த குடும்பம் அனுபவிக்கும் வேதனைகளை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அதிலும் இன்றைய நடுத்தர மற்றும் கீழ்தட்டு குடும்பங்களில் இதன் தாக்கம் இன்னும் மோசமாக இருக்கும்.

எதிர்காலத்தை கணிப்பது கடினம்.. பணி நீக்கம் குறித்து சுந்தர் பிச்சை கருத்து.. குழப்பத்தில் ஊழியர்கள்! எதிர்காலத்தை கணிப்பது கடினம்.. பணி நீக்கம் குறித்து சுந்தர் பிச்சை கருத்து.. குழப்பத்தில் ஊழியர்கள்!

5 தளங்கள்

5 தளங்கள்

இந்த சவாலான காலகட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்களா? கவலையே வேண்டாம். உங்களூக்கு கீழ் வரும் ஐந்து தளங்கள் உதவலாம்.

லிங்க்ட் இன்

கிளாஸ்டோர்

இண்டீட்

மான்ஸ்டர்

கேரியர்பில்டர்

லிங்க்ட் இன்

லிங்க்ட் இன்

லிங்க்ட் இன் தளத்தில் சமீபத்திய காலமாக பல வேலை தேடும் பதிவுகளை பார்த்திருக்கலாம். குறிப்பாக திடீரென தாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதும், தங்களுக்கு உதவுமாறும் கேட்ட பதிவுகளையும் பார்க்க முடிகிறது. ஆக லிங்க்ட் இன் நிச்சயம் உங்களுக்கு வேலை தேட பயனுள்ளதாக அமையும் எனலாம். இதில் வேலை தேடுபவர் தங்களுக்கு எந்த மாதிரியான வேலை, எந்த துறையில் வேலை, என தேட முடியும். இன்றைய இளைஞர்கள் பலரும் இந்த தளத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.

கிளாஸ்டோர்

கிளாஸ்டோர்

வேலை தேடுபவர்களுக்கு தங்களுக்கான புதிய வேலையை தேடிக் கொள்ள கிளாஸ்டோர் தளம் பயனுள்ளதாக இருக்கும். இங்கு எந்த நிறுவனத்தில் எந்த வேலை இருக்கு? இதனை எங்கு தேடலாம். இதில் நிறுவனத்தில் எவ்வளவு சம்பளம், ஊழியர்கள் பற்றிய ஆய்வு, இதன் மூலம் வேலை வாய்ப்பினை தேட இது உதவும்.

இண்டீட்

இண்டீட்

உலகின் மிகப்பெரிய வேலை தேடும் தளமாக இண்டீட் உள்ளது. பல மில்லியன் கணக்கான வேலைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் எங்கு வேலை தேவை, எந்த துறையில் வேலை தேவை, அதற்கேற்ப திட்டமிட்டு வேலை தேடிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு பொருத்தமான வேலையினை விரைவில் தேடிக் கொள்ள முடியும்.

 மான்ஸ்டர்

மான்ஸ்டர்

மான்ஸ்டர் தளம் வேலை தேடும் பலருக்கும் பரிட்சயமான ஒன்று. இது வேலை இழந்தவர்கள் பலருக்கும் சரியான ஒரு தளமாகவும் இருக்கும் எனலாம். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வரும் இந்த நிறுவனம், இந்த தளத்தில் பல்வேறு வேலைகளை பட்டியலிட்டுள்ளது. இதில் ஒருவர் சரியான வேலையை பெற என்னவெல்லாம் செய்யலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை தொகுத்து வழங்குகிறது.

கேரியர்பில்டர்

கேரியர்பில்டர்

கேரியர்பில்டர் மற்றொரு வேலை தேடும் பிரபலமான தளமாக உள்ளது. இதன் மூலம் வேலை தேடுபவர்கள் தங்களுக்கு ஏற்ற வேலைகளை தேடிக் கொள்ளலாம். இது வேலை தேடுபவர்களின் தகுதிகேற்ப வேலைகளை தேடிக் கொள்ள உதவும் ஒரு அம்சமாக உள்ளது. இந்த தளமும் உங்களது ரெஸ்யூமை எப்படி வடிவமைப்பது, எப்படி உங்களுக்கான சரியான வேலையினை தேடுவது என பல சேவைகளை வழங்கி வருகின்றது.

இதுமட்டும் அல்ல இன்னும் பல தளங்கள் வேலை தேட பயனுள்ளதாக அமையலாம். எனினும் மேற்கண்ட ஐந்து தளங்கள் வேலையிழந்தவர்களுக்கு மிக பயனுள்ளதாக அமையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

layoff 2022: check these 5 job search platforms to find employment with ease

Some sites like Indeed, Monster, CareerBuilder can be useful.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X