ஊழியர்கள் பணிநீக்கம்: இன்டெல், கிரெடிட் சூயிஸ், எலக்ட்ரோலக்ஸ், மெட்டா, ஆரக்கிள் அதிர்ச்சி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் ரெசிஷன் அச்சம் உச்சத்தைத் தொட்டு இருக்கும் நிலையில் அடுத்தடுத்து உலக நாடுகளின் மத்திய வங்கி பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தை அதிகரித்து வருவதால் அதிகப்படியான கடனில் தவிக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இதேபோல் உலகில் அனைத்து முன்னணி நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் வருவாய் குறைந்து வரும் போது செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.

குறிப்பாகக் கடந்த 3 மாதத்தில் பெரிய நிறுவனங்கள் முதலீட்டாளர்களைச் சமாளிக்க வேறு வழியே இல்லாமல் செலவுகளைக் குறைக்கும் விதமாகப் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

ஆரக்கிள்

ஆரக்கிள்

உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஆரக்கிள் ஆகஸ்ட் மாதமே அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் அமைதியான முறையில் பணிநீக்க செய்யத் துவங்கியுள்ளது, இந்த முறை வட அமெரிக்கா கிளவுட் இன்பரா மற்றும் டெக் பரிவில் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.

மறுசீரமைப்புச் செலவுகள்

மறுசீரமைப்புச் செலவுகள்

2023 ஆம் ஆண்டில் 519 மில்லியன் டாலர் அளவிலான மறுசீரமைப்புச் செலவுகள் ஏற்படும் எனப் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைச் சமாளிக்கவே தற்போது ஆரக்கிள் ஊழியர்கள் பணிநீக்கம் செய்வதாகத் தெரிகிறது.

மெட்டா

மெட்டா

பேஸ்புக்-இன் தாய் நிறுவனமான மெட்டா அனைத்து ஊழியர்களிடத்திலும் 200 சதவீதம் முழு முயற்சியுடன் பணியாற்றி உங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெட்டா பங்குகள்

மெட்டா பங்குகள்

மெட்டாவெர்ஸ் வர்த்தகத்தின் தோல்வி, மந்தமான காலாண்டு முடிவுகள் ஆகியவற்றின் மூலம் மெட்டா பங்குகள் மோசமான சரிவை பதிவு செய்துள்ள நிலையில் தற்போது பணிநீக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இன்டெல்

இன்டெல்

சில நாட்களுக்கு முன்பு இன்டெல் நிறுவனம் கம்பியூட்டர் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் நிதி நிலையைச் சமாளிக்கப் பணிநீக்கம் இருக்க வாய்ப்பு உள்ளதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் செப்டம்பர் காலாண்டு முடிவில் இண்டெல் அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 20 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக உறுதி அளித்துள்ளது.

10 பில்லியன் டாலர் சேமிப்பு

10 பில்லியன் டாலர் சேமிப்பு

இதன் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் பணத்தைச் சேமிக்க முடியும் என அறிவித்துள்ளது. இதில் 2023ல் மட்டும் சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சேமிக்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டு உள்ளது.

Electrolux

Electrolux


ஸ்வீடன் நாட்டின் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எலக்ட்ரோலக்ஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்ததுள்ளது. எலக்ட்ரோலக்ஸ் 3வது காலாண்டில் கடுமையான இழப்புகளை அறிவித்தது தொடர்ந்து இந்தப் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

 4000 ஊழியர்கள் பணிநீக்கம்

4000 ஊழியர்கள் பணிநீக்கம்

எலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் பெரும்பாலானவை செலவின குறைப்புகள் அதாவது பணிநீக்கம் வட அமெரிக்கா வணிகப் பகுதியில் தான் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தச் சில வாரத்தில் அல்லது மாதத்தில் எலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் சுமார் 3,500-4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தீர்மானம் எடுத்துள்ளது.

கிரெடிட் சூயிஸ்

கிரெடிட் சூயிஸ்

கிரெடிட் சுசூசி நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 9,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்ததுள்ளது. ஆனால் எந்தெந்த பதவிகள், எந்த நாட்டில் பணிநீக்கம் செய்யப்படும் என்ற விபரங்களை இதுவரையில் வெளியிடவில்லை.

9,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தி முதலீட்டாளர்கள் பிடிக்கவில்லை, இந்த அறிவிப்புக்கு பின் கிரெடிட் சுசூசி பங்குகள் 13%க்கும் மேல் சரிந்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

layoff update : Intel, credit suisse, Electrolux, Meta, oracle announced big layoff for cost cutting

layoff update: Intel, credit Suisse, Electrolux, Meta, and oracle announced big layoffs for cost-cutting
Story first published: Friday, October 28, 2022, 18:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X