எல்ஐசி IPO-வுக்கு செபி ஒப்புதல்.. எப்போது வெளியீடு.. ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி (LIC)யின் பொதுப் பங்கு வெளியீட்டுக்காக செபி அனுமதி கொடுத்துள்ளது.

எனினும் தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் இந்த பங்கு விற்பனையானது தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

எல்ஐசி தனது பங்கு வெளியீட்டுக்கான வரைவினை கடந்த மாதமே செபியிடம் சமர்ப்பித்திருந்த நிலையில், தற்போது தான் அனுமகி கிடைத்துள்ளது. எல்ஐசி-யில் மத்திய அரசின் வசம் இருக்கும் பங்குகள் 5% அல்லது 31.62,49,885 பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தில் புதிய அதிகாரி.. அதுவும் ரிலையன்ஸ் நிப்பான் முன்னாள் ஊழியர்..!!எல்ஐசி நிறுவனத்தில் புதிய அதிகாரி.. அதுவும் ரிலையன்ஸ் நிப்பான் முன்னாள் ஊழியர்..!!

 22 நாட்களுக்குள் அனுமதி

22 நாட்களுக்குள் அனுமதி

செபிக்கு அளிக்கப்பட்ட 22 நாட்களுக்குள் எல்ஐசி-க்கு பங்கு வெளியீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி-யின் இந்த பங்கு வெளியீட்டில் 50% தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எனவும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு 15%மும், 35% சில்லறை விற்பனையாளர்களுக்கும் விற்பனை செய்யப்படும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டது.

 எப்போது வெளியீடு?

எப்போது வெளியீடு?

தற்போது நிலவி வரும் நெருக்கடியான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்த மெகா பங்கு வெளியீடானது அடுத்த நிதியாண்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செபியின் இந்த ஒப்புதல்கள் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். எல்ஐசி இன்சூரன்ஸ் சந்தையில் கணிசமான பங்குகளை கொண்ட ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமாக இருந்து வருகின்றது.

 நிதி திரட்டல்

நிதி திரட்டல்

இதன் மூலம் 65,000 கோடி ரூபாய் முதல் 85,000 கோடி ரூபாய் வரையில் நிதியினை திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செபி பங்கு வெளியீட்டுக்கு 650 பக்க விவர அறிக்கையை செபி பரிசீலித்து அனுமதி வழங்க முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. எனினும் இந்த அறிவிப்பில் முக மதிப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

 தாமதமாகலாம்

தாமதமாகலாம்

அரசின் நிதி பற்றாக்குறையை எட்ட எல்ஐசி-யின் இந்த பங்கு வெளியீடானது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எனினும் தற்போது சந்தையில் நிலவி வரும் அசாதாரண நிலைக்கு மத்தியில் இந்த பங்கு வெளியீடானது தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிசிதாரர்களுக்கு சலுகையா?

பாலிசிதாரர்களுக்கு சலுகையா?

இந்த பங்கு வெளியீட்டில் பாலிசிதாரர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. நேரிடையாக சில்லறை முதலீட்டாளராக பங்கேற்காமல், பாலிசிதாரராக பங்கேற்கும்போது, எளிதில் ஐபிஓ-வில் பங்கு கிடைக்கலாம். இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தெரியவரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC gets sebi's approval to launch India's mega IPO

LIC gets sebi's approval to launch India's mega IPO/எல்ஐசி IPO-வுக்கு செபி ஒப்புதல்.. எப்போது வெளியீடு.. ?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X