இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவான எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிகப்படியான ஆர்வம் காட்டி வருகின்றனர்.
12 மணி அளவில் மொத்த ஐபிஓ பங்குகளில் சுமார் 27 சதவீத பங்குகளுக்கு முதலீடு குவிந்ததுள்ளது. இதில் QIB பிரிவு: NIL, HNI பிரிவு: 5%, ரீடைல் பிரிவு: 30%, எல்ஐசி ஊழியர்கள் பிரிவு: 46%, பாலிசிதாரர்கள் பிரிவு: 94% பங்குகளுக்கு முதலீடு குவிந்துள்ளது.
இந்நிலையில் என்எஸ்ஈ தளம் மிகவும் முக்கியமான மற்றும் வியப்பு அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ரிலையன்ஸ் பவர் சாதனையை முறியடிக்கும் எல்ஐசி.. ஐபிஓ இன்று துவக்கம்..!

எல்ஐசி ஐபிஓ
மத்திய அரசு இந்த எல்ஐசி ஐபிஓ-வை மிகவும் வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் நிலையில், ஐபிஓ முதலீட்டைப் பங்குச்சந்தையின் விடுமுறை நாளான சனிக்கிழமையும் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கான கதவு சனிக்கிழமையும் திறக்கப்பட்டு உள்ளது.

சனிக்கிழமை
எல்ஐசி நிறுவனத்தின் மிகப்பெரிய ஐபிஓ புதன்கிழமை துவங்கியுள்ள நிலையில், மே 9ஆம் தேதி வரையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதில் சனி மற்றும் ஞாயிறு வரும் நிலையில் தேசிய பங்குச்சந்தை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சனிக்கிழமையும் எல்ஐசி நிறுவனத்திற்கான ஐபிஓ முதலீட்டை ஏற்க உள்ளது.

210 பில்லியன் ரூபாய்
இந்திய அரசு சுமார் 221.4 மில்லியன் எல்ஐசி பங்குகளை 902 ரூபாய் முதல் 949 ரூபாய் வரையிலான விலையில் விற்கிறது. எல்ஐசி நிறுவனம் அதிகப்படியான விலையான 949 ரூபாய் விலையில் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் 210 பில்லியன் ரூபாய் ($2.7 பில்லியன்) வரை திரட்டும்.

ஐபிஓ பங்கு விற்பனை
பொதுவாக ஐபிஓ பங்கு விற்பனைக்குச் சனிக்கிழமை முதலீட்டை ஏற்பது என்பது சற்று அசாதாரணமானது. இருப்பினும், எல்ஐசி ஐபிஓவின் அளவு மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் அபரிமிதமான ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனச் சந்தை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

ரீடைல் முதலீட்டாளர்கள் மட்டுமே
ஆனால் இது தேசிய பங்குச்சந்தையின் கணினியில் சனிக்கிழமை வர்த்தகம் அனுமதிப்பது மூலம் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எவ்வாறாயினும், இந்திய மூலதனச் சந்தை உள்கட்டமைப்பு சனிக்கிழமையும் முதலீட்டை ஏற்க உருவாக்கப்பட்டு உள்ளதால் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது. ஆனால் இந்தச் சலுகை ரீடைல் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே.