ஆறு சதவிகிதம் அதிகரித்த இன்சூரன்ஸ் புகார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னேறிய நாடுகளுடன், இந்தியாவை ஒப்பிடும் போது, லைஃப் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவே. சொல்லப் போனால் மெல்ல இந்தியாவில் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இன்சூரன்ஸ் துறையை நெறிமுறை செய்யும் அமைப்பு ஐ ஆர் டி ஏ ஐ என்றழைக்கப்படும் IRDAI - Insurance Regulatory and Development Authority of India அமைப்பு தான்.

ஆறு சதவிகிதம் அதிகரித்த இன்சூரன்ஸ் புகார்..!

கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மட்டும் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி தொடர்பக வந்திருக்கும் புகார்களின் எண்ண்ணிக்கை சுமாராக 6 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக, ஐ ஆர் டி ஏ ஐ அமைப்பே தன் ஆண்டு அறிக்கையில் சொல்லி இருக்கிறது.

வந்து இருக்கும் மொத்த லைஃப் இன்சூரன்ஸ் புகாரில் 1,02,127 புகார்கள் அரசின் லைஃப் இன்சூரன்ஸ் கார்பப்ரேஷனுக்கு எதிராக வந்திருக்கின்றனவாம். மீதமுள்ள 61,137 லைஃப் இன்சூரன்ஸ் புகார்கள் தான் மற்ற தனியார் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு எதிராக வந்திருக்கின்றனவாம்.

அப்படி என்ன மாதிரியான புகார்கள் வந்திருக்கிறது எனப் பார்த்தால், லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் மூலம் தங்களுக்கு (பாலிசி எடுத்தவர்களுக்கு) எவ்வளவு வருமானம் வரும், ஒரு பாலிசியை எடுப்பதால் தங்களுக்கு என்ன லாபம் என்கிற விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் பாலிசிக்களை வாங்கியது போன்ற புகார்கள் வந்து இருக்கிறதாம். அதொடு வழக்கம் போல தவறான விவரங்களைச் சொல்லி இன்சூரன்ஸ் பாலிசியை தலையில் கட்டிவிடுவது மற்றும் எத்தனை ஆண்டுகளுக்கு அல்லது மாதங்களுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் பாலிசிக்களை வாங்கியது என ஐ ஆர் டி ஏ ஐ அமைப்பு தன் ஆண்டு அறிக்கையில் சொல்லி இருக்கிறது.

வெங்காயத்துக்கு 172 %..! உணவுக்கான மொத்த விலை பணவீக்கம் 11.08 %..!வெங்காயத்துக்கு 172 %..! உணவுக்கான மொத்த விலை பணவீக்கம் 11.08 %..!

ஒரு பக்கம் லைஃப் இன்சூரன்ஸ் தொடர்பாக புகார்கள் அதிகரித்தாலும், மறு பக்கம் லைஃப் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறதாம்.

கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், லைஃப் இன்சூரன்ஸுக்கு, முதலாம் ஆண்டு ப்ரீமியம் வசூல் மட்டும் 11.39 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இது கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் கண்ட 10.75 % வளர்ச்சியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Life insurance complaints increased by 6 percent

The complaints received by the IRDAI - Insurance Regulatory and Development Authority of India against the life insurers increased by 6 percent.
Story first published: Monday, December 16, 2019, 20:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X