உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் யார் யார் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவர்கள் இருவரையும் பிரபலமான கால்பந்து விளையாட்டு வீரர்களாக பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

 

இவர்கள் இருவரும் கால்பந்து விளையாட்டு வீரர்கள் என்பதோடு, இவர்களுக்குள் இருக்கும் மற்றுமொரு ஒற்றுமை இவர்கள் இந்த ஆண்டு தங்கள் கடைசி பிஃபா (FIFA) உலக கோப்பையில் விளையாடலாம்.

இன்று உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் இவர்கள் தான் டாப் எனலாம்.

லியோனல் மெஸ்ஸி & கிறிஸ்டியானோ ரொனால்டோ

லியோனல் மெஸ்ஸி & கிறிஸ்டியானோ ரொனால்டோ

Sportico's 100 Highest-Paid Athletes in the World 2022 பட்டியலின் படி, லியோனல் மெஸ்ஸி 122 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 115 மில்லியன் டாலர் வருமானத்துடன் மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர். இந்த வருமானம் என்பது அவர்களின் சம்பளம் மற்றும் மற்ற ஒப்புதல் வருவாய்களும் அடங்கும்.

யார் முதலிடம்?

யார் முதலிடம்?

இந்த டாப் பட்டியலில் பிரேசில் கால்பந்து வீரரான நெய்மர் 103 மில்லியன் டாலருடன் 4வது இடத்திலும் உள்ளார். இரண்டு மூன்றாவது எல்லாம் சரி,முதலிடத்தில் எந்த வீரர் வாருங்கள் பார்க்கலாம்.

கூடைப்பந்து விளையாட்டு வீரரான லெப்ரான் ஜேம்ஸ் 126.9 மில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளார். இவர் தான் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர் ஆகும். இவரின் சம்பளத்துடன் நைக், பெப்சிகோ, வால்மார்ட், AT & T மற்றும் கிரிப்டோ.காம் உள்ளிட்ட பிராண்ட் பார்ட்னர்களுடனான ஒப்பந்தத்தின் மத்தியில் வரும் ராயல்டி வருமானம் என பலவும் இதில் அடங்கும்.

யாரெல்லாம் பட்டியலில்
 

யாரெல்லாம் பட்டியலில்

உலகின் அதிக சம்பளம் வாங்கும் இந்த 100 விளையாட்டு வீரர்களில் 10 விதமான விளையாட்டுகளை சேர்ந்த, 24 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த பட்டியலில் அடங்குவர்.

இவர்களின் மொத்த வருமானம் என்பது 4.46 பில்லியன் டாலராகும். இதில் 3.24 பில்லியன் டாலர் மதிப்பிலான சம்பளம் மற்றும் பரிசுத் தொகையும், இதனுடன் கடந்த 12 மாதங்களில் அவர்கள் செய்த ஒப்புதல்கள் மற்றும் உரிமம், நினைவு பரிசுகள் என பலவும் சேர்த்து 1.23 பில்லியன் டாலர் என அடங்கும்.

விராட் கோலி

விராட் கோலி

இதில் சுவாரஸ்மான விஷயம் என்னவெனில் டாப் 100ல் இடம் பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகும். இவர் 33.9 மில்லியன் டாலருடன் 61வது இடத்தில் உள்ளனர்.

டென்னிஸ் ஜாம்பவான் ஆன ரோஜர் பெடரர், இந்த ஆண்டு 85.7 மில்லியன் டாலர்களுடன் 8வது இடத்தில் உள்ளார்.

பெண்களில் யார் அதிகம்

பெண்களில் யார் அதிகம்


இதே பெண்கள் பட்டியலில் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனைகளில் டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா ஆவார். இவரின் வருமானம் 53.2 மில்லியன் டாலருடன் 20வது இடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டு ஓய்வுபெற்ற செரீனா வில்லியம்ஸ் 35.3 மில்லியன் டாலருடன் 52வது இடத்திலும் உள்ளார். இவர் அதிக சம்பளம் பெறும் இரண்டாவது பெண் வீராங்கனையாக உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lionel Messi, Cristiano Ronaldo among worlds highest paid atheletes in 2022

LeBron James tops the list of highest paid athletes in the world, followed by Lionel Messi and Cristiano Ronaldo in second and third places
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X