இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் மதுபான விற்பனை அதிகரித்து வரும் நிலையில் 2020ஆம் நிதியாண்டின் முதல் 6 மாத காலகட்டத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட மதுபான விற்பனை தடை, மதுபானம் மீது போடப்பட்ட கொரோனா வரி, லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாக மதுபான விற்பனை சுமார் 29 சதவீதம் சரிந்துள்ளது.
இந்திய மதுபான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில் நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாத காலத்தில் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 3 முக்கியக் காரணத்தால் நாட்டில் மதுபான விற்பனை சந்தித்துள்ளது.
அதிலும் 4 முக்கிய மாநிலங்களில் மதுபானம் மீது விதிக்கப்பட்ட அதிகப்படியான அதிகப்படியான வரி காரணமாகப் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளதாக இந்திய மதுபான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த 4 முக்கிய மாவட்டத்தில் தமிழ்நாடும் உள்ளதா..? வாங்கப் பார்ப்போம்..!
அதிகப்படியான கட்டுப்பாடுகள்
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு விதித்த லாக்டவுன் காரணமாக நாட்டின் அனைத்து வர்த்தகம் மற்றும் சேவைகள் முடப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் மதுபானம் வாங்க அருந்த முடியாத சோகத்திற்குத் தள்ளப்பட்டனர்.
இந்தப் பிரச்சனைக்கு முடிவுகட்ட மத்திய மாநில அரசுகள் ஆலோசனை செய்து முதற்கட்ட லாக்டவுன் தளர்வில் மதுபான கடைகளில் பல கட்டுப்பாடுகள் உடன் மதுபான விற்பனை துவங்கப்பட்டது.
கொரோனா வரி
கட்டுப்பாடுகள் உடன் மதுபான விற்பனையைத் துவங்கினாலும் பல மாநிலங்கள் மதுபானம் மீது கூடுதலாக கொரோனா வரி விதித்து அரசுக்கு வருமானம் ஈட்டவும், மக்கள் மத்தியில் இந்த லாக்டவுன் காலத்தில் மதுபானம் விற்பனை செய்வதும் குறைக்க வரி விதிக்கப்பட்டது.
இதனால் மதுபானத்தின் விலையும் அதிகமானது.
விற்பனை பாதிப்பு
பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட கூடுதல் வரியின் காரணமாக இந்தியாவில் மதுபான விற்பனை 5 முதல் 10 சதவீதம் இக்காலகட்டத்தில் குறைந்துள்ளது என மதுபான கூட்டமைப்பின் தலைவர் வினோத் கிரி தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான பாதிப்பு
2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மதுபான விற்பனை சுமார் 49 சதவீதம் சரிந்தது. அதன் பின்பு பல மாநிலங்களில் ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்யப்பட்டது.
அதேபோல் பல வாரங்களுக்குப் பின் மதுபானம் விற்பனை துவங்கப்பட்டதால் விற்பனை அளவு அதிகரித்தது. ஆனாலும் கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 2வது காலாண்டிலும் 9 சதவீதம் சரிவு தான்.
5 மாநிலங்கள்
மதுபான விற்பனை தடை, மதுபானம் மீது போடப்பட்ட கொரோனா வரி, லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாக ஆந்திரா (-51%), சத்தீஸ்கர் (-40%), ஜம்மு & காஷ்மீர் (-39%), மேற்கு வங்கம் (-22%) மற்றும் ராஜஸ்தான் (-20%) ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான விற்பனை சரிவு ஏற்பட்டது..
மதுபான விற்பனை சரிவு ஏற்பட்ட மாநிலங்கள் பட்டியலில் டாப் 10 இடத்தில் கூட வரவில்லை என்பதால் தமிழ்நாட்டு மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications