இந்தியாவில் 2023ல் நம்பகமான சிறந்த 10 ஐடி நிறுவனங்கள் எது.. ஐடி ஊழியர்களே இதையும் தெரிஞ்சுகோங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மிகவும் நம்பகமான 10 ஐடி நிறுவனங்களின் பட்டியல் 2023ல் எது எது என TopSoftwareCompanies.co பட்டியலிட்டுள்ளது. அது என்னென்ன ?

பணிபுரிய அடுத்த ஆண்டு சிறந்த நிறுவனங்கள் எது? இது எதன் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது வாருங்கள் பார்க்கலாம்.

இதற்கிடையில் இணைய மேம்ப்பாட்டுத் திறன்கள், பணியாளர் எண்ணிக்கை, பணி அனுபவம், வாடிக்கையாளர் மதிப்புரைகள் மற்றும் பல விஷயங்களை ஆராய்ந்து இந்த பட்டியலானது தொகுப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ரெசிஷன் பீதி.. இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை என்ன..?! அமெரிக்காவில் ரெசிஷன் பீதி.. இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை என்ன..?!

ஹைபர்லிங்க் இன்ஃபோசிஸ்டம்

ஹைபர்லிங்க் இன்ஃபோசிஸ்டம்

பிரபல முன்னணி ஐடி நிறுவனமான ஹைபர்லிங்க் இன்ஃபோசிஸ்டம், வாடிக்கையாளர்களுக்கு பல வகையாக டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகின்றது. இது சாப்ட்வேர் டெவலப்மெண்ட் & மொபைல் ஆப் டெவலப்மெண்ட், சேல்ஸ்போர்ஸ் டெவலப்மெண்ட் மற்றும் பல வகையான சேவைகளை வழங்கி வருகின்றது. இது இந்தியாவில் மட்டும் அல்லாது, சர்வதேச அளவில் சேவைகளை வழங்கி வருகின்றது.

ஹைபர்லிங்க் இன்ஃபோசிஸ்டம் - சேவை

ஹைபர்லிங்க் இன்ஃபோசிஸ்டம் - சேவை

இது கடந்த 2011ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் 4500க்கும் மேற்பட்ட ஆப்கள், 2200 மேற்பட்ட இணையதளங்கள், 120க்கும் மேற்பட்ட AI& IoT சொல்யூசன்ஸ், 20க்கும் மேற்பட்ட NFT மார்கெட் பிளேஸ், 140-க்கும் மேற்பட்ட கேம்கள், 80-க்கும் மேற்பட்ட பிளாக் செயின் சொல்யூசன்ஸ் என பலவும் வழங்கி வருகின்றது. இது சர்வதேச அளவில் 2700-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றன.

சைபேஜ் சாப்ட்வேர்

சைபேஜ் சாப்ட்வேர்

உலகளாவிய அளவில் பொறியியல் துறையில் முன்னணியில் உள்ள ட்ஜிட்டல் தயாரிப்புகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு மேலான அதன் வலுவான பயணத்தில் பொறியியல் சேவையில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த நிறுவனம் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Virtusa

Virtusa


சர்வதேச அளவிலான டிஜிட்டல் வர்த்தக மாற்றம் செய்யும் ஒரு நிறுவனம் தான் Virtusa கார்ப்பரேஷன் ஆகும். டிஜிட்டல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அவுட்சோர்சிங் சேவையினை, உலகளாவிய அளவில் வழங்கி வருகின்றது. தற்போது இந்த நிறுவனம் சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், வங்கிகள், நிதி சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ், ஹெல்த்கேர் சேவைகள், டெலி கம்யூனிகேஷன்ஸ், மீடியா, பொழுதுபோக்கு துறை, போக்குவரத்து, உற்பத்தி மற்றும் டெக்னாலஜி நிறுவனங்களுக்கும் சேவை வழங்கி வருகின்றது.

வேல்யூலேப்ஸ்

வேல்யூலேப்ஸ்

வேல்யூலேப்ஸ் ஒரு சர்வதேச டிஜிட்டல் நிறுவனமாகும். இது ப்ராடக்ட் டெவலப்மெண்ட், டேட்டா டெக்னாலஜி, வடிவமைப்பு மற்றும் ஆலோசனை என பல வகையிலும் உலகளாவிய அளவில் சேவை வழங்கி வரும் ஒரு நிறுவனமாகும். கடந்த 25 ஆண்டுகளில் 26 இடங்களில், 7000 அசோசியேட்டுகள் மற்றும் 250க்கும் மேற்பட்ட வாடிக்கையாளார்கள் என விரிவடைந்துள்ளது.

பெர்சிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்

பெர்சிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்

பெர்சிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனமும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனமாகும். இது சிறந்த நவீனமயமாக்கல் நிறுவனமும் கூட. இது அதன் அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றது. இதன் தனித்துவமான செயல்பாடுகள், புதுமையான கூட்டாளர் சுற்றுசூழல் அமைப்பு ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்க உதவுகின்றன.

ஐடிசி இன்ஃபோடெக்

ஐடிசி இன்ஃபோடெக்

ஐடிசி இன்ஃபோடெக் என்பது ஒரு உலகளாவிய தொழில் நுட்ப நிறுவனமாகும். ஐடிசி குழுமம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப ட்ஜிட்டல் நிபுணத்துவம், வலுவான தொழில் சார்ந்த கூட்டணிகள், டொமைன் குறித்த சிறந்த நிபுணத்துவம் என பலவற்றையும் தடையின்றி சேவைகளை வழங்க வழிவகுக்கின்றது.

இந்த நிறுவனம் வங்கி மற்றும் நிதி சேவை, ஹெல்த்கேர், உற்பத்தி துறை, நுகர்வோர் பொருட்கள் மற்றும் பயணம், ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட துறைகளில் சேவை செய்து வருகின்றது.

டிசிஎஸ்

டிசிஎஸ்

டாடா குழுமத்தினை சேர்ந்த டிசிஎஸ் நிறுவனம் 5,00,000 ஆலோசகர்களைக் கொண்டுள்ளது. டிசிஎஸ் புதுமை தொழில் நுட்பம் மற்றும் திறன் ஆகியவற்றின் முலம் சிறந்த எதிர்கால திட்டங்களை உருவாக்கி வருகின்றன. டிசிஎஸ் நிறுவனம் இன்று உலகம் முழுக்க தனது சேவையினை செய்து வரும் முன்னணி நிறுவனமாகும்.

கேப்ஜெமினி

கேப்ஜெமினி

கேப்ஜெமினி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் சர்வதேச அளவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையினை செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தில் 3,50,000-க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களை கொண்டுள்ளது. இது 55 வருட பாரம்பரியம் மற்றும் ஆழ்ந்த தொழில் நுட்ப நிபுணத்துடன், அதன் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கி வரும் ஒரு நிறுவனமாகும்.

TO THE NEW

TO THE NEW

TO THE NEW 2008ல் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது வேகமான வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் வளர்ச்சி விகிதம் 2017ல் இருந்து 60% ஆகும். இது 2000-க்கும் மேற்பட்ட குழுவுடன் இணைந்துள்ளது. இந்தியாவில் சிறந்த 100 நிறுவனங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. அதேபோல பணி புரிய சிறந்த நிறுவனம் என்ற விருதினையும் பெற்றுள்ளது.

Hdata சிஸ்டம்ஸ்

Hdata சிஸ்டம்ஸ்

இந்தியாவின் முன்னணி பெரிய டேட்டா அனலிடிக்ஸ் மற்றும் பிசினஸ் இன்டெலிஜென்ஸ் சேவை வழங்கும் நிறுவனமாகும், Hdata சிஸ்டம்ஸ் டேட்டா சயின்ஸ் தொழில் நுட்பத்தினை அடிப்படையாக கொண்ட சேவையினை,வாடிக்கையாளர்களின் வணிகத்தினை மேம்படுத்தவும், அவர்களின் இலக்கினை எளிதாக அடையவும் உதவுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

list of top 10 most IT companies in india 2023

Hdata Systems, TO THE NEW, TCS, Capgemini, Tata Group, ITC Infotech, Persistence Systems, Valuelabs, Virtusa, Cypage Software, Hyperlink Infosystems are listed as the best IT companies to work with in the tear 2023.
Story first published: Sunday, November 27, 2022, 20:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X