முதல் நாள் 13,000% லாபம், மறுநாள் 98% சரிவு.. மர்மமான சீன நிறுவனத்தின் பங்கு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க பங்குச் சந்தையில் சீன நிறுவனத்தின் பங்கு ஒன்று முதல் நாளே 13,000 சதவீதம் லாபத்தை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

 

அதன் பின்னர் அதே பங்கு அடுத்த நாள் 98% சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி அமெரிக்க ஊடகங்களில் வைரலானது.

முதல் நாள் மிகப்பெரிய லாபம், இரண்டாவது நாள் மிகப்பெரிய சரிவு அடைந்த அந்த சீன நிறுவனம் எது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

இன்று பங்கு சந்தையின் போக்கு எப்படியிருக்கும்.. 10 கவனிக்க வேண்டிய விஷயங்கள்.. கவனமா இருங்க! இன்று பங்கு சந்தையின் போக்கு எப்படியிருக்கும்.. 10 கவனிக்க வேண்டிய விஷயங்கள்.. கவனமா இருங்க!

 சீன நிறுவனம்

சீன நிறுவனம்

அமெரிக்க பங்குச்சந்தையில் சீன நிறுவனமான Adentax Group Corp, அதன் முதல் நாள் வர்த்தகத்தில் மிகப்பெரிய லாபம் பெற்று முதலீட்டாளர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாகியது. ஆனால் அடுத்த நாளே மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளானார்கள்.

 ஒரே நாளில் 13,031% உயர்வு

ஒரே நாளில் 13,031% உயர்வு

புளூம்பெர்க் நிறுவனத்தின் தகவலின்படி Adentax Group Corp. என்ற நிறுவனத்தின் பங்கு கடந்த புதன்கிழமை அமெரிக்க பங்குச்சந்தையில் அறிமுகமாகி 13,031% வரை உயர்ந்தது. இதனால் இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் $20 பில்லியனாக உயர்ந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் பங்குகள் அடுத்த நாள் 95% வீழ்ச்சியடைந்தன. இதனால் அதன் பங்குகள் முதல் நாள் பார்த்த லாபம் அனைத்தையும் இழந்தது. மேலும் தற்போது இந்நிறுவனத்தின் பங்கு 98%க்கு மேல் குறைந்துள்ளது.

 இது முதல்முறையல்ல
 

இது முதல்முறையல்ல

அமெரிக்க பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் திடீரென உயர்ந்து அதன்பின் பாதாளத்தில் சரிவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே ஏழு நிறுவனங்களுக்கு இதுபோல் நடந்துள்ள நிலையில் இந்நிறுவனம் எட்டாவது நிறுவனம் ஆகும்.

நிதிச்சேவை

நிதிச்சேவை

Adentax நிறுவனம் ஆடை உற்பத்தி மற்றும் தளவாட சேவைகளை செய்து வரும் ஒரு நிறுவனம் ஆகும். AMTD டிஜிட்டல் மற்றும் மேஜிக் எம்பயர், இவை இரண்டும் ஹாங்காங்கில் உள்ள நிதிச் சேவைகளை செய்து வருகிறது.

$1.3 பில்லியன் மதிப்புள்ள பங்குகள்

$1.3 பில்லியன் மதிப்புள்ள பங்குகள்

AMTD தலைவரும் CEOவுமான Hong Zhida மற்றும் இயக்குநராக இருக்கும் அவரது சகோதரர் Hong Zhiwang ஆகியோர்கள் இந்நிறுவனத்தின் $1.3 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

வருவாய் குறைந்தாலும் லாபம்

வருவாய் குறைந்தாலும் லாபம்

Magic Empire மற்றும் AMTD Digital ஆகிய நிறுவனங்கள் மார்ச் 2022 இல் முடிவடைந்த ஆண்டில் லாபம் ஈட்டினாலும், அதன் வருவாய் 49% குறைந்து $12.7 மில்லியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Little Known Chinese Firm Addentax’s Stock Drops 98% After Mystery Rally Of 13,000% In US

Little Known Chinese Firm Addentax’s Stock Drops 98% After Mystery Rally Of 13,000% In US | முதல் நாள் 13,000% லாபம், மறுநாள் 98% சரிவு.. மர்மமான சீன நிறுவனத்தின் பங்கு
Story first published: Tuesday, September 6, 2022, 16:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X