தமிழகத்தில் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. எதற்கெல்லாம் அனுமதி.. இதோ முழு விபரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இரவு நேர ஊரடங்கு தொடங்கி, ஞயிற்று கிழமை ஊரடங்கு வரையில் பல அதிரடியான அறிவிப்புகளை கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பில் பல்வேறு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த கட்டுப்பாடு சமயத்தில் எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர லாக்டவுன்.. நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் அனுமதி உண்டா? தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர லாக்டவுன்.. நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் அனுமதி உண்டா?

மாநிலத்திற்குள் பேருந்து  சேவை

மாநிலத்திற்குள் பேருந்து சேவை

மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் அனுமதி உண்டு. எனினும் பயணத்தின்போது முகக்கவசம், உடல் வெப்ப நிலை பரிசோதனை, கூட்ட நெரிசலை தவிர்த்தல் உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை சம்பந்தபட்ட நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். மேலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் என இருவரும் கட்டாயம் இரு டோஸ் தடுப்பூசியினையும் போட்டிருக்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி

அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி

அத்தியாவசிய தேவைகளாக பால் விற்பனை, தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலக்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவை உள்ளிட்ட மருத்துவ துறை சார்ந்த பணிகள், ஏடிஎம் மையங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

பெட்ரோல் பங்குகளுக்கு அனுமதி

பெட்ரோல் பங்குகளுக்கு அனுமதி

பெட்ரோல், டீசல் பங்குகளுக்கு 24 மணி நேரமும் செயல்பட அனுமதி உண்டு.

இது தவிர உற்பத்தி தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கு செயல்பட அனுமதி உண்டு. எனினும் அடையாள அட்டை, தடுப்பூசி கட்டாயம்.

ஞாயிற்று கிழமை என்னவெல்லாம் அனுமதி?

அத்தியாவசிய பொருட்களான பால், மருத்துவ பணிகள், மருந்தகங்கள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் பெட்ரோல், டீசல் பங்குகள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி உண்டு.

பயணத்திற்கு அனுமதி

பயணத்திற்கு அனுமதி

ஞாயிற்று கிழமை மற்றும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக வாடகை வாகனங்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் அவ்வாறு செல்லும்போது பயணச்சீட்டு கட்டாயம் இருக்க வேண்டும்.

அதே போல பொது பேருந்துகளில், புற நகர் இரயில்களில், மெட்ரோ ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி உண்டு

உணவகங்கள்

உணவகங்கள்

உணவகங்கள், தங்கும் விடுதிகள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அமர்ந்து உண்ண அனுமதி.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதி.

நகைக்கடைகள், துணிக்கடைகள் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி கூடங்கள்

உடற்பயிற்சி கூடங்கள்

கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் விளையாட்டுக்கள், உணவகங்கள், 50% வாடிக்கையாளர்களுடன் அனுமதி

இதே தியேட்டர்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50% மட்டுமே அனுமதி.

திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் கட்டுப்பாடுகளுடனும், உள் விலையாட்டு அரங்கில் 50% பார்வையாளர்களுடனும் அனுமதி.

கருத்தரங்குகள், இசை, நாடகம், போன்ற நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50% பேர் மட்டுமே அனுமதி.

இதே போல அழகு நிலையங்கள், ஸ்பாக்களும் 50% வாடிக்கையாளார்களுடன் அனுமதி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lockdown restrictions in Tamil Nadu .. What is allowed?

Lockdown restrictions in Tamil Nadu .. What is allowed?/தமிழகத்தில் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. எதற்கெல்லாம் அனுமதி.. இதோ முழு விபரம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X