சாமானிய மக்கள் ஏமாற்றம்.. வணிக சிலிண்டர் விலை ரூ.115 சரிவு..சென்னையில் எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் நவம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று, சமையல் எரிவாயு விலையானது குறைக்கப்படலாம் என்ற பெருத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

ஆனால் சாமானியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அப்படி ஏதும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. மாறாக வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் விலையானது குறைந்துள்ளது.

எனினும் எண்ணெய் நிறுவனங்களின் இத்தகைய நடவடிக்கையானது பணவீக்கத்தினை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சரிவு.. உங்கள் ஊரில் விலை என்ன?வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சரிவு.. உங்கள் ஊரில் விலை என்ன?

எவ்வளவு குறைப்பு?

எவ்வளவு குறைப்பு?

வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையானது 115.50 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வணிக சிலிண்டர்களின் விலையினை குறைப்பது இது 7வது முறையாகும். இது சர்வதேச சந்தையில் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவிலும் விலை குறைந்து வருகின்றது.

டெல்லியில் என்ன விலை

டெல்லியில் என்ன விலை

19 கிலோ சிலிண்டர் விலையானது ஜூன் மாதத்தில் இருந்து மட்டும் 610 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இதன் மூலம் நிச்சயம் பணவீக்கம் என்பது கட்டுக்குள் வர உதவிகரமாக இருக்கும் எனலாம்.

சிலிண்டர் விலைக் குறைப்பின் மத்தியில் தற்போதைய விலை டெல்லியில், 19 கிலோவுக்கு 1859 ரூபாயில் இருந்து குறைந்து, 1744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம்.

 

கொல்கத்தா & மும்பையில் என்ன நிலவரம்?
 

கொல்கத்தா & மும்பையில் என்ன நிலவரம்?

கொல்கத்தாவில் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர்களின் விலை 1959 ரூபாயாக இருந்த நிலையில், இனி அது 1846 ரூபாயாக குறையும்.

இதே போல மும்பையில் 19 கிலோ சிலிண்டரின் விலைஉஆனது 1811.50 ரூபாயில் இருந்து, 1696 ரூபாயாக குறைந்துள்ளது.

 

சென்னையில் என்ன நிலவரம்?

சென்னையில் என்ன நிலவரம்?

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலையானது 2009.50 ரூபாயில் இருந்து, 1893 ரூபாயாக குறைந்துள்ளது.

கடந்த அக்டோபர் 1 அன்றும் வணிக சிலிண்டர்களின் விலையானது குறைக்கப்பட்டது. இதுவும் சர்வதேச சந்தையில் நிலவி வரும் சரிவுக்கு மத்தியில் குறைத்ததாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

 

சமையல் எரிவாயு விலை

சமையல் எரிவாயு விலை

எனினும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலை குறையாமல் இருப்பது பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது . இது முன்னதாக கடந்த மே மாதம் 19, 2022 அன்று கடைசியாக குறைக்கப்பட்டது. தற்போது வரையில் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சமையல் எரிவாயு நிலவரம் என்ன?

சமையல் எரிவாயு நிலவரம் என்ன?

இது டெல்லியில் 1053 ரூபாய்க்கும், கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் முறையே 1079, 1052.5, 1068.5 ரூபாய்க்கும் விற்பனை செய்யபப்ட்டு வருகின்றது.

மாநில அரசுகளின் வாட் வரியினை பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் விலை வேறுபடுகின்றது.

 

பயன் யாருக்கு?

பயன் யாருக்கு?

ஹோட்டல்கள், டீ கடைகள், நிறுவனங்கள் என பல இடங்களில் வணிக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த விலை குறைப்பானது வியாபரிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: lpg எல்பிஜி
English summary

LPG cylinder price update: Commercial cylinder price falls by Rs 115: Do you know how much in Chennai?

The price of a cylinder for commercial use has decreased by Rs 115.50
Story first published: Tuesday, November 1, 2022, 8:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X