ஸ்தம்பித்த ஜெர்மனி.. 1000 விமானங்கள் திடீர் ரத்து.. Lufthansa அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெர்மனி நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான Lufthansa புதன்கிழமை திட்டமிட்டபடி கிரவுண்ட் ஸ்டாப் அனைவரும் ஒரு நாள் வெளிநடப்புக் காரணமாகச் சுமார் 1000க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்துச் செய்வதாகக் கூறியுள்ளது. கோடை விடுமுறையில் செல்வதைப் போலவே Lufthansa நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.

 

இந்த 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் 130,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்டிகோ ராகுல் பாட்டியா: ரூ.36000 கோடி சொத்து இருக்கு, ஆனா இதுதான் பேவரைட்..!இன்டிகோ ராகுல் பாட்டியா: ரூ.36000 கோடி சொத்து இருக்கு, ஆனா இதுதான் பேவரைட்..!

லுஃப்தான்சா

லுஃப்தான்சா

ஊழியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவை ஏற்கனவே லுஃப்தான்சா உள்ளிட்ட பல முன்னணி விமான நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்துச் செய்ய வேண்டிய மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

1000 விமானங்கள் ரத்து

1000 விமானங்கள் ரத்து

அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் முக்கிய விமான நிலையங்களில் விமானப் பயணிகள் பல மணிநேர வரிசைகளில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், கோவிட்-19 தொற்றின் லாக்டவுன்-க்கு பின்பு வெளிநாடுகளுக்குப் பயணிக்கத் திட்டமிட்டவர்களுக்கு இந்த 1000 விமானங்களின் ரத்து பெரும் விரக்தியடையச் செய்துள்ளது.

ஜெர்மனி - பிராங்பேர்ட், முனிச்
 

ஜெர்மனி - பிராங்பேர்ட், முனிச்

ஜெர்மனி நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான லுஃப்தான்சா பிராங்பேர்ட் ஹைப்-ல் 678 விமானங்களை ரத்து செய்துள்ளது, அவற்றில் பெரும்பாலானவை புதன்கிழமை திட்டமிடப்பட்டன, மேலும் Munich ஹைப்-ல் 345 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது என லுஃப்தான்சா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

9.5 சதவீத ஊதிய உயர்வு

9.5 சதவீத ஊதிய உயர்வு

லுஃப்தான்சா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் 9.5 சதவீத ஊதிய உயர்வு கோரிக்கையைத் தொடர்ந்து தொழிலாளர் சங்கம் verdi புதன்கிழமை வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதைத் தொடர்ந்து தான் லுஃப்தான்சா கிரவுண்ட் ஸ்டாப் அனைவரும் ஒரு நாள் வெளிநடப்புச் செய்ய உள்ளனர்.

புதன்கிழமை

புதன்கிழமை

லுஃப்தான்சா கிரவுண்ட் ஸ்டாப் அனைவரும் ஒரு நாள் அதாவது புதன்கிழமை வெளிநடப்புச் செய்ய உள்ளனர். இதனால் புதன்கிழமை மட்டும் அல்லாமல் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் சில விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்கள் இருக்கலாம் என்று லுஃப்தான்சா தெரிவித்துள்ளது.

ஐடி ஊழியர்களின் சராசரி சம்பளம் சரிவு.. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ என்ன செய்கிறது..?! ஐடி ஊழியர்களின் சராசரி சம்பளம் சரிவு.. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ என்ன செய்கிறது..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lufthansa cancels over 1,000 flights due to ground staff walkout and Strike over salary

Lufthansa cancels over 1,000 flights due to ground staff walkout and Strike over salary 1000 விமானங்கள் திடீர் ரத்து.. Lufthansa அறிவிப்பால் விமானப் பயணிகள் அதிர்ச்சி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X