மதுரை மல்லி.. மதுரை மல்லி.. 3000 ரூபாயா.. பொண்டாட்டிக்கு பூ வாங்கித் தர லோன் போடணும் போலயே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதுரை மல்லிகைப் பூக்கு பெரிய இண்ட்ரோ தேவை இல்லை. நேரடியாக விஷயத்துக்கு வருவோம். மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பூக்களின் விலை விண்ணைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது.

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, நிலக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்தும், மற்ற மதுரை சுற்று வட்டார சிறு கிராமங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த பூக்கள் விலை ஏற்றத்தில், அரசியாக அமர்ந்து இருக்கிறது மதுரை மல்லிகைப் பூ. பின்னிப் பெடல் எடுக்கும் வட கிழக்கு பருவ மழை மற்றும் திடீர் வானிலை மாற்றங்களை நாம் கண் கூடாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

 0% செய் கூலிக்கு தங்கம் கிடைக்கலாம்..! தங்கம் வாங்க தயாரா இருங்க பாஸ்..! 0% செய் கூலிக்கு தங்கம் கிடைக்கலாம்..! தங்கம் வாங்க தயாரா இருங்க பாஸ்..!

வெங்காயம்

வெங்காயம்

இந்த வானிலை மாற்றங்களால் சமீபத்தில் தான் வெங்காயத்தின் வரத்து குறைந்து விலை கிலோ 100 ரூபாயைத் தொட்டது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் சுமாராக 100 - 125 ரூபாய்க்கும், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120 - 150 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. இந்தியா முழுக்க ஏறத் தாழ இது தான் விலை.

பூக்கள்

பூக்கள்

தொடர் மழை காரணமாக வெங்காயத்தைத் தொடர்ந்து, இப்போது பூக்கள் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளது. பொருளாதாரத்தின் க்ளாசிக் தியரியான டிமாண்ட் சப்ளை அடிப்படையில் தற்போது பூக்களின் வரவு குறைந்து இருக்கிறது, தேவை அப்படியே இருக்கிறது. எனவே விலை தன்னிச்சையாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மல்லுகட்டும் மல்லி

கடந்த வாரத்தில் 1,500 முதல் 1,800 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டு இருந்தது ஒரு கிலோ மதுரை மல்லி பூ. தற்போது இந்த மதுரை மல்லி பூ வரத்து குறைவால், ஒரு கிலோ மதுரை மல்லிப் பூ விலை சுமாராக 3 ஆயிரம் ரூபாயைத் தொட்டு இருக்கிறது. இதை ஏ என் ஐ செய்தி நிறுவனமும் உறுதி செய்து இருக்கிறது.

என்ன தேவை

என்ன தேவை

இன்னும் இரண்டு வாரங்களில் மார்கழி மாதம் வந்துவிடும். எனவே திருமணம் போன்ற சுப காரியங்களை கார்த்திகை மாத முகூர்த்தங்களில் அடித்துப் பிடித்து நடத்துபவர்கள் அதிகம். எனவே சுப காரியங்களில் பூக்கள் இல்லை என்றால் எப்படி..? அதோடு மகர ஜோதி பார்க்க மாலை போட்டுக் கொள்ள ஐயப்ப பக்தர்களின் சீசன் வேறு என்பதால் பூக்களுக்கான டிமாண்ட் இருக்கத் தானே செய்யும்.

கடன்

கடன்

எனவே மதுரை மல்லிப் பூவின் விலை கிலோவுக்கு 3,000 தொட்டு மதுரை வாசிகளுக்கே மயக்கம் வர வைத்திருக்கிறது. இந்த விலை நீடித்தால், ஒரு நல்ல நாளில் மனைவிக்கு ஒரு முழம் பூ வாங்கிக் கொடுப்பதற்கு கூட வங்கியின் தனி நபர் கடன் வாங்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது. விரைவில் விலை குறைந்தால் சரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: price விலை
English summary

Madurai jasmine flower price touch Rs 3000 per kg

The world famous madurai malli alias Madurai jasmine flower price touched a sky rocketing 3000 rupees per kg.
Story first published: Tuesday, December 3, 2019, 13:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X