10,000 பேருக்கு மேல் வேலை.. மகேந்திரா குழுமத்தின் அதிரடி நடவடிக்கை.. செம சான்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகேந்திரா லாகிஸ்டிக்ஸ் நிறுவனம் அடுத்து வரவிருக்கும் பண்டிகை கால சீசனிற்காக, 10,100 பேருக்கு வேலை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

மேலும் இந்த ஊழியர்களில், கணிசமான எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ளும் என்றும் மகேந்திரா லாகிஸ்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

 
10,000 பேருக்கு மேல் வேலை.. மகேந்திரா குழுமத்தின் அதிரடி நடவடிக்கை.. !

மகேந்திரா குழுமத்தின் தளவாடங்கள் பிரிவு கடந்த இரண்டு ஆண்டுகளில், Pradhan Mantri Kaushal Vikas Yojanaஇன் கீழ் ஓட்டுனர்கள் மற்றும் கிடங்கு ஆப்ரேட்டர்கள் உட்பட சுமார் 20,000 பேருக்கு மேல் பயிற்சி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மூன்றாவது லாகிஸ்டிக்ஸ் நிறுவனமான மகேந்திரா குழுமம், வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கு முன்னதாகவே வேலைவாய்ப்புகளில் மிகவும் உற்சாகத்தினை செலுத்த மீண்டும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் 10,100 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ள நிலையில். இந்த ஊழியர்களில் பலபேர் கணிசமானவர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்கள் என்று மகேந்திரா லாகிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தவிர தொற்று நோய்களின் போது மூன்றாம் தரப்பு பணியாளர்களில் 40 சதவீத ஊழியர்களை, சேர்ப்பதில் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேந்திரா லாகிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் திருநங்களையும், மகாராஷ்டிராவின் பிவாண்டியில் பணியமர்த்த தொடங்கியது. இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராம்ப்ரவீன் சுவாமி நாதன் கூறுகையில், எங்கள் ஊழியர்கள், கூட்டாளிகள், வணிக பங்காளிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகங்களிடையே பன்முகத்தன்மையை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

மகேந்திரா குழுமம் மகராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும். இந்த குழுமம், லாகிஸ்டிக்ஸ், விண்வெளி, வேளாண் வணிகம், வாகன உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள், கட்டுமான உபகரணங்கள், பாதுகாப்பு, எரிசக்தி, தகவல் தொழில்நுட்ப துறை, ஓய்வு மற்றும் விருந்தோம்பல், தளவாடங்கள், அசையா சொத்து வணிகம், சில்லறை விற்பனை, பயன்பாட்டு வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் உள்ளிட்ட பல வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றது.

இதன் மூலம், ஒரு இந்திய நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருவது நல்ல விஷயம் தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mahindra logistics added 10,100 seasonal jobs ahead of festival season

Mahindra logistics added 10,100 seasonal jobs ahead of festival season
Story first published: Monday, October 12, 2020, 22:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X