காகிதத்தில் மட்டுமே மிஞ்சிய மேக் இன் இந்தியா.. டிபென்ஸ் துறையில் மிகப்பெரிய தேக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காகிதத்தில் மட்டுமே மிஞ்சிய மேக் இன் இந்தியா.. டிபென்ஸ் துறையில் மிகப்பெரிய தேக்கம்..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகக் கூறப்படுவது மேக் இன் இந்தியா. வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கச் சிவப்புக் கம்பளம் விரிப்பதே இத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோள். இத்திட்டத்தால் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து தொழிற்சாலை துவங்க முடியும். இது மட்டும் இல்லாமல் இத்திட்டத்தால் இந்தியாவில் பல கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இந்தியாவில் தற்போது இருக்கும் வேலைவாய்ப்பு பற்றி யாருக்கும் சொல்லித் தெரியத் தேவையில்லை.

இப்படி இருக்கையில் பிரதமர் மோடி அறிவித்த மேக் இன் இந்தியா திட்டத்தில் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது பாதுகாப்புத் துறை தான். ஆனால் கடந்த 6 வருடத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறையில் அறிவிக்கப்பட்ட எந்தொரு பெரிய திட்டமும் செயல்பாட்டு வரவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

6 வருடம்
 

6 வருடம்

கடந்த 6 வருடத்தில் பாதுகாப்புத் துறையில் செயல்படுத்தப் போவதாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பெரும் திட்டங்களான போர் நீர்மூழ்கிக் கப்பல்,

கண்ணியகற்றிகள், சிறிய ரகப் போர் ஹெலிக்காப்டர்கள், போர் வாகனங்கள், போர் விமானங்கள், போர் காலத்தில் பயன்படுத்தும் பயன்படுத்தும் கனரக வாகனங்கள் தயாரிப்பு ஆகிய திட்டங்களும் எதுவும் துவங்கப்படவில்லை.

இத்திட்டங்களின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 3.5 லட்சம் கோடி ரூபாய்.

ரூ. 3.5 லட்சம் கோடி

ரூ. 3.5 லட்சம் கோடி

இந்த 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இன்னும் பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறதா..? அல்லது முடங்கிவிட்டதா..? என்று எதுவும் தெரியவில்லை. ஆனால் தொழிற்சாலையில் உற்பத்தி துவங்குவதற்காக இறுதி ஒப்பந்தம் போன்றவை எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்பது உறுதியான தகவல்.

AK-203 ரகத் துப்பாக்கி

AK-203 ரகத் துப்பாக்கி

உத்திர பிரதேசம் கோர்வா பகுதியில் ரஷ்ய நிறுவனத்துடனான கூட்டணியில் சுமார் 7,50,000 kalashnikov AK-203 அதிநவீன துப்பாக்கிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை தான் முதல் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் அடுத்த வருடத்திற்குள் இத்திட்டம் துவங்கும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2017 முதல் ஒரே கதை தான்..
 

2017 முதல் ஒரே கதை தான்..

2017ஆம் ஆண்டிலிருந்து சுமார் 6 மிகப்பெரிய திட்டங்கள் அதிகாரத்துவ இடையூறுகள், நீண்டகால நடைமுறைகள், வணிக மற்றும் தொழில்நுட்ப மோதல்கள், தேவையான அரசியல் உந்துதல் இல்லாமை, பின்தொடர்தல் இல்லாதது என அடுக்கடுக்கான காரணங்கள் கிடப்பில் இருந்தது. 2 வருடங்களுக்குப் பின்பும் எதுவும் மாறவில்லை.

மாறியது ஒன்றும் மட்டும் தான் திட்டங்களின் எண்ணிக்கை, தற்போது திட்டங்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 7 ஆக உயர்ந்துள்ளது.

திட்டங்களும் அதன் மதிப்பும்..

திட்டங்களும் அதன் மதிப்பும்..

200 லைட் யூடிலிட்டி ஹெலிகாப்டர் (Kamov-226T) - 8000 கோடி ரூபாய்

111 நேவல் யூடிலிட்டி ஹெலிகாப்டர் (Twin Engine copper) - 21,273 கோடி ரூபாய்

டிசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல் - 50,000 கோடி ரூபாய்

2,314 பியூச்சர் இன்பேன்டரி காம்பேக்ட் வாகனங்கள் - 60,000 கோடி ரூபாய்

12 அதிநவீன போர் கப்பல்கள் - 32,000 கோடி ரூபாய்

114 பைடர் ஜெட் - 1.4 லட்சம் கோடி ரூபாய்

56 மீடியம் டிரான்ஸ்போர்ட் ஏர்கிராப்ட் - 11,929 கோடி ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

‘Make in India’ : No major defence projects is taken off

The long-pending projects, collectively worth over Rs 3.5 lakh crore, are either stuck or still meandering through different stages. None of the major ‘Make in India’ projects in the defence arena, ranging from new-generation stealth submarines, minesweepers and light utility helicopters to infantry combat vehicles, transport aircraft and fighter jets, have actually taken off in the last six years.
Story first published: Thursday, December 5, 2019, 17:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more