மேக் மை டிரிப், ஓயோ, கோய்பிபோ-வுக்கு ரூ.392 கோடி அபராதம்.. CCI வைத்த செக்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களான மேக் மை டிரிப், ஓயோ, கோய்பிபோ உள்ளிட்ட ஆன்லைன் டிராவல் நிறுவனங்களுக்கு, இந்திய போட்டி ஒழுங்கு முறை ஆணையம் 392 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து இந்திய போட்டி ஒழுங்கு முறை ஆணையம் 131 பக்க ஆனையில் குறிப்பிட்டுள்ளது.

வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் எம்.எஸ்.தோனி முதலீடு.. எந்த நிறுவனம் தெரியுமா?வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் எம்.எஸ்.தோனி முதலீடு.. எந்த நிறுவனம் தெரியுமா?

எவ்வளவு அபராதம்?

எவ்வளவு அபராதம்?

மேற்கண்ட இந்த அபராத தொகையில் மேக் மை டிரிப் மற்றும் கோய்பிபோ நிறுவனங்களுக்கு 223.48 கோடி ருபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே ஓயோ நிறுவனத்திற்கு 168 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சிசிஐ-யின் இந்த முடிவால் நிறுவனங்கள் மேற்கொண்டு பெரியளவில் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலை மேம்படுத்த முயற்சி

தொழிலை மேம்படுத்த முயற்சி

ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களான ஒயோ, மேக் மை டிரிப், கோய்பிபோ, தங்கள் தொழிலை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் பல ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. வெளி நாடுகளிலும் ஓயோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

ஸ்டார்ட் அப்களின் வேலை என்ன?

ஸ்டார்ட் அப்களின் வேலை என்ன?

மேற்கண்ட ஆன்லைன் டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளின் விவரங்களையும், கட்டணங்களையும் தங்களது தளத்தில் பட்டியலிடுகின்றன. இதற்காக வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளையும் கொடுத்து வருகின்றன. இது சுற்றுலா செல்லும் பயணிகள் உள்பட பலருக்கும் இது மிக பயனுள்ளதாகவும், லாபகரமானதாகவும் உள்ளது.

ஒப்பந்தங்களில் சிக்கல்

ஒப்பந்தங்களில் சிக்கல்

ஆனால் மேக் மை டிரிப் மற்றும் ஓயோ, கோய்பிபோ நிறுவனங்கள், ஹோட்டல்களுடன் போடும் ஒப்பந்தங்களில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் குற்ற சாட்டு உள்ளது.

இதில் மேற்கண்ட ஆன்லைன் டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் ,ஒப்பந்தம் செய்து வைத்துள்ள ஹோட்டல்களில், விடுதிகளில் வேறு நிறுவனங்கள் மூலம் பதிவு செய்ய கூடாது என்ற கண்டிஷனும் உண்டாம்.

 

 கண்டிஷன் மேல் கண்டிஷன்

கண்டிஷன் மேல் கண்டிஷன்

மேலும் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஹோட்டல்களின் இணைய பக்கத்தில் இருந்து நேரடியாக புக் செய்திடவும் கூடாதாம். இந்த ஒப்பந்தத்தினால் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், வளர்ச்சி தடைபடுவதாகவும் கூறப்படுகிறது. ஆக இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் அபராதமும் விதித்துள்ளது.

CCI அறிவிப்பு

CCI அறிவிப்பு

இது குறித்து சிசிஐ 2019ல் இருந்து பல கட்ட விசாரணையும் நடத்தியுள்ளது. இதற்கிடையில் தான் தற்போது இந்த ஒப்பந்தங்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் புதியதாக ஒப்பந்தங்களை போடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Make My Trip, Oyo, Goibibo fined Rs 392 crore by Competition commission of india

CCI imposed fine of Rs.392 crore on online travel companies such as Make My Trip, Oyo and goibibo
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X