META: இன்று முதல் பணிநீக்கம் துவக்கம்.. இந்தாங்க 4 மாத சம்பளம், கிளம்புங்க.. மார்க் செய்த தவறு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமாக இருக்கும் மெட்டா மோசமான காலாண்டு முடிவுகளும், அதிகப்படியான பங்கு விலை சரிவின் வாயிலாகத் தனது வர்த்தகத்தையும், நிர்வாகத்தையும் மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த 6 மாதத்தில் 100க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பரிவு, பதவிகளில் இருக்கும் ஊழியர்களும் சில வாரங்களுக்கு முன்பு அனைவரும் 200 சதவீத முழு ஈடுபாடு உடன் பணிகளைச் செய்ய வேண்டும், இல்லையெனில் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என அறிவித்தார்.

இந்த நிலையில் வாரத்தின் துவக்கத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் மெட்டா நிறுவனத்தின் மாஸ் லேஃஆப் இருக்கும் என அறிவித்தது மெட்டா ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊழியர்கள் பணிநீக்கம்: இன்டெல், கிரெடிட் சூயிஸ், எலக்ட்ரோலக்ஸ், மெட்டா, ஆரக்கிள் அதிர்ச்சி அறிவிப்பு..! ஊழியர்கள் பணிநீக்கம்: இன்டெல், கிரெடிட் சூயிஸ், எலக்ட்ரோலக்ஸ், மெட்டா, ஆரக்கிள் அதிர்ச்சி அறிவிப்பு..!

மெட்டா பணிநீக்கம்

மெட்டா பணிநீக்கம்

செவ்வாய்க்கிழமை மெட்டா பிளாட்பார்மஸ் இன்க் நிறுவனத்தின் சிஇஓ-வான மார்க் ஜூக்கபெர்க் புதன்கிழமை முதல் ஊழியர்களின் பணிநீக்கம் தொடரும் என இந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

மார்க் ஜூக்கர்பெர்க் தான் காரணம்

மார்க் ஜூக்கர்பெர்க் தான் காரணம்

செவ்வாய்க்கிழமை நடந்த முக்கியமான கூட்டத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் மிகவும் சோகத்துடன் கலந்து கொண்டதாகவும், நிறுவனத்தின் தவறான நடவடிக்கைகளுக்குத் தான் மட்டுமே பொறுப்பு என்றும் பேசிய அவர், நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றிய அதீத நம்பிக்கையினாலும், தவறான கணிப்பினாலும் அதிகளவிலான ஊழியர்களைச் சேர்க்கப்பட்டது என இக்கூட்டத்தில் இந்த மாஸ் லேஃஆப் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

அதிகப் பாதிப்பு

அதிகப் பாதிப்பு

புதன்கிழமை துவங்க உள்ள பணிநீக்கத்தில் recruiting மற்றும் business அணிகளில் தான் அதிகப்படியான பணிநீக்கம் இருக்கும் எனக் குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க், மேலும் பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் அனைத்து அறிவிப்புகளும் புதன்கிழமை 6 மணிக்கு ஊழியர்களுக்கு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

4 மாத சம்பளம்

4 மாத சம்பளம்

இந்த நிலையில் மெட்டா நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவர் லோரி கோலர் கூறுகையில் தற்போதைய பணிநீக்கத்தில் வேலைவாய்ப்புகளை இழப்பவர்களுக்குக் குறைந்தது 4 மாத சம்பளத்தை severance pay-ஆகப் பெறுவார்கள் என ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

20% ஊழியர்கள் பணிநீக்கம்

20% ஊழியர்கள் பணிநீக்கம்

மெட்டா நிறுவனத்தில் 87000 ஊழியர்கள் உள்ளனர், இந்தப் பணிநீக்கத்தில் குறைந்தது 10 - 20 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாகக் கணிக்கப்படுகிறது.

டிவிட்டர் - ஜாக் டோர்சி

டிவிட்டர் - ஜாக் டோர்சி

உதாரணமாக மெட்டா நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான டிவிட்டர் நிறுவனத்தில் மிகவும் குறைவான காலகட்டத்தில் அதிகளவிலான ஊழியர்களைச் சேர்த்துவிட்டேன் என இதன் நிறுவனர் ஜாக் டோர்சி டிவிட்டரில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டரில் 50 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் முன்பு டிவிட்டரில் ஒருவர் செய்யும் வேலையை 10 பேர் சரிபார்க்கும் கட்டமைப்பு உள்ளது எனக் கோபத்துடன் டிவீட் செய்திருந்தார்.

டிவிட்டர் இந்திய

டிவிட்டர் இந்திய

இந்த 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கத்தின் மூலம் இந்திய டிவிட்டர் நிறுவனத்தில் இருந்த 200க்கும் அதிகமாக ஊழியர்கள் எண்ணிக்கையில் 90 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்படும் தற்போது டிவிட்டர் இந்தியா 20-25 ஊழியர்கள் உடன் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mark Zuckerberg Meta starts Mass layoff today; employees will get 4 months salary as severance pay

Mark Zuckerberg Meta starts Mass layoff today; employees will get 4 months salary as severance pay
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X