மார்க் ஜூக்கர்பெர்க் ராஜினாமா செய்ய வேண்டிய நேரம் வந்தாச்சு..?!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தள நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் முக்கியப் பிரிவுகளான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் தொடர்ந்து வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது.

 

இந்த நிலையில் இதன் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் மெட்டாவெர்ஸ் மீது அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

பேஸ்புக் ஒரு தீவிரவாத அமைப்பா..? ரஷ்யா அதிரடி..! பேஸ்புக் ஒரு தீவிரவாத அமைப்பா..? ரஷ்யா அதிரடி..!

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க் பெரும் முதலீட்டை செய்து பல மாதங்களாக உருவாக்கி வரும் மெட்டாவெர்ஸ் தளத்தின் முக்கிய அறிமுக விழா செவ்வாய்க்கிழமை நடந்தது, இது டெக் வல்லுனர்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பியது மட்டும் அல்லாமல்..

எதிர்காலம் கேள்விக்குறி

எதிர்காலம் கேள்விக்குறி

மெட்டா நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் மார்க் ஜூக்கர்பெர்க் மெட்டா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என டெக் உலகில் பேச்சு அடிப்பட்டு உள்ளது.

மெட்டா கணெக்ட் கான்பிரென்ஸ்
 

மெட்டா கணெக்ட் கான்பிரென்ஸ்

செவ்வாய்க்கிழமை மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில் மெட்டா நிறுவனத்தின் மெட்டா கணெக்ட் கான்பிரென்ஸ் நடந்தது. இந்தக் கான்பிரென்ஸ்-ல் மார்க் ஜூக்கர்பெர்க் நிறுவனம் உருவாக்கிய மெட்டாவெர்ஸ் உலகத்தையும் அதில் 1500 டாலர் மதிப்பிலான ஹெட்செட் அணிந்துகொண்டு விர்ச்சுவல் உலகில் இருக்கும் கேரக்டர்களுக்குக் கால் இருப்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டு உள்ளது.

விர்ச்சுவல் உலகம்

விர்ச்சுவல் உலகம்

அதாவது பேஸ்புக் போலவே உங்கள் நண்பர்கள் உடன் விர்ச்சுவல் உலகில் இருக்கலாம், இதில் நீங்கள் நடந்தால் உங்கள் கேரக்டரும் நடக்கும் அவ்வளவு தான்.

மிகப்பெரிய வெற்றி..?

மிகப்பெரிய வெற்றி..?

இதை மிகப்பெரிய வெற்றி எனத் திரும்பத் திரும்ப மெட்டா நிறுவனத் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அதன் ஊழியர்கள் கான்பிரென்ஸ்-க்கு வந்த டெக் வல்லுனர்களிடம் மெட்டாவெர்ஸ்-ல் உங்கள் கேரக்டர்களுக்குத் தற்போது கால்கள் வந்துள்ளது எனப் பெருமை பேசி வந்தனர். ஆனால் உண்மையில் இது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 பில்லியன் டாலர் முதலீடு

10 பில்லியன் டாலர் முதலீடு

மார்க் ஜூக்கர்பெர்க் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீட்டில் மெட்டாவெர்ஸ் உலகை உருவாக்கி வருகிறார், ஆனால் இதுவரையில் வெறும் 3 லட்சம் பேர் தான் இந்தத் தளத்திற்குள் உள்ளனர். பேஸ்புக்-ன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2.9 பில்லியன் டாலர்.

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்

இந்த நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் மெட்டா நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளனர். வர்த்தக அடிப்படையில் பார்த்தால் மார்க் ஜூக்கர்பெர்க்-யிடம் தங்க முட்டை போடும் வாத்து இரண்டு உள்ளது பேஸ்புக், இன்ஸ்டாகிராம்.

தங்க முட்டை போடும் வாத்து

தங்க முட்டை போடும் வாத்து

ஆனால் இவ்விரு தளமும் 2022 முதல் சரிவை எதிர்கொண்டு வருகிறது. காரணம் இளம் தலைமுறையினர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் விட்டு டிக்டாக் பக்கம் திரும்பியுள்ளனர். இதேபோல் 30 வயதுக்கு மேற்பட்டோர் mental-health முக்கியம் என்பதை உணர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் பக்கம் போவதை நிறுத்தியுள்ளனர்.

மெட்டாவெர்ஸ்

மெட்டாவெர்ஸ்


இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வீழ்ச்சியைக் கண்டுகொள்ளாமல் மெட்டாவெர்ஸ் பக்கம் திருப்பியுள்ளார், இது நிறுவனத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

டெக் தலைவர்கள்

டெக் தலைவர்கள்

ஆனால் இதுபோன்ற பிரச்சனை புதியது அல்ல, உலகின் முன்னணி டெக் நிறுவனத் தலைவர்களான கூகுள் லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின், டிவிட்டர் ஜாக் டோர்சி, உபர் டிராவிஸ் கலானிங் போன்ற பலர் எதிர்கொண்டு உள்ளனர்.

ராஜினாமா

ராஜினாமா

தற்போது மார்க் ஜூக்கர்பெர்க் செய்ய வேண்டியது அனைத்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை இருக்கும் மெட்டா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி விட்டு, திறமையான மற்றொரு நபரிடம் கொடுக்க வேண்டும்.

மார்க் ஜூக்கர்பெர்க் ஸ்டார்ட்அப்

மார்க் ஜூக்கர்பெர்க் ஸ்டார்ட்அப்

இதைத் தொடர்ந்து தனியாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கி அதில் மெட்டாவெர்ஸ் அதாவது விர்ச்சுவல் உலகம் குறித்த பணிகளைச் செய்ய வேண்டும். இந்தத் தனி ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மார்க் ஜூக்கர்பெர்க் தனது சொந்த பணத்தையும் போட முடியும், தனது பணக்கார நண்பர்களின் பணத்தையும் போட முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mark Zuckerberg needs to step down; Facebook, Instagram are falling, metaverse looks unimpressive

Mark Zuckerberg needs to step down; Facebook, Instagram are falling, and metaverse looks unimpressive in Meta Connect conference. Meta's developer's Avatars with legs!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X