Maruti Suzuki: பட்ஜெட் விலையில் பெரிய எஸ்யூவி கார்.. வேற லெவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி சமீபத்தில் எஸ்யூவி பிரிவில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில் சமீபத்தில் அறிமுகம் செய்த கிரான்ட் விட்டாரா கார் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக இந்த எஸ்யூவி கார் ஹைப்ரிட் மாடல் என்பதால் கூடுதல் மைலேஜ் கிடைக்கும் காரணத்தால் பட்ஜெட் பிரியர்கள், எலக்ட்ரிக் கார் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இதே கிரான்ட் விட்டாரா காரை மலிவான விலையில் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியிலும், மாற்று எரிபொருள் விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகச் சிஎன்ஜி வென்ஷனில் கிரான்ட் விட்டாரா கார்களை அறிமுகம் செய்துள்ளது.

ஓலா-வின் புதிய திட்டம்.. பாவிஷ் அகர்வால் பலே கில்லாடி..! ஓலா-வின் புதிய திட்டம்.. பாவிஷ் அகர்வால் பலே கில்லாடி..!

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

மாருதி சுசூகி நிறுவனம் தனது முக்கிய வர்த்தக வாகனங்களான ஆல்டோ கே10, எக்ஸ்எல்6, ஸ்விஃப்ட் மற்றும் பலேனோவின் சிஎன்ஜி வெர்ஷன் கார்களை அறிமுகப்படுத்திய பிறகு, கிரான்ட் விட்டாரா சிஎன்ஜி மாடலை அறிமுகப்படுத்தி மாருதி சுசூகி இப்பிரிவு வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது.

கிரான்ட் விட்டாரா சிஎன்ஜி

கிரான்ட் விட்டாரா சிஎன்ஜி

மாருதி சுசூகி நிறுவனம் கிரான்ட் விட்டாரா சிஎன்ஜி மாடலை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்டா மற்றும் ஜீட்டா மாடலை வெளியிட்டு உள்ளது. இதில் டெல்டா மாடல் கார் விலை 12.85 லட்சம் ரூபாய், இதேபோல் ஜீட்டா மாடல் காரின் விலை 14.84 லட்சம் ரூபாய். இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது கவனிக்கவேண்டியது.

சப்ஸ்கிரைப் சேவை
 

சப்ஸ்கிரைப் சேவை

கிரான்ட் விட்டாரா சிஎன்ஜி காரை மக்களிடம் வேகமாகக் கொண்டு சேர்க்கும் விதமாக மாருதி சுசூகி நிறுவனம் சப்ஸ்கிரைப் மூலமாக இந்தக் காரை-ஐ வழங்குகிறது. கிரான்ட் விட்டாரா சிஎன்ஜி கார்-ஐ மாதாந்திர சந்தா அடிப்படையில் 30,723 ரூபாயில் பெற முடியும்.

மைலேஜ்

மைலேஜ்

 

ஹைப்ரிட் மாடலை போலவே கிரான்ட் விட்டாரா சிஎன்ஜி கார் சுமார் 26.6 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. ஆனால் ஹைப்ரிட் மாடலுக்கும், சிஎன்ஜி மாடலுக்கும் மிகப்பெரிய அளவிலான விலை வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சிஎன்ஜி வாகன பிரியர்கள் அல்லது குறைந்த விலையில் பெரிய கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்குக் கிரான்ட் விட்டாரா சிஎன்ஜி மாடல் சரியாகத் தேர்வு.

10 லட்ச சிஎன்ஜி கார்கள்

10 லட்ச சிஎன்ஜி கார்கள்

மாருதி சுசூகி இந்தியாவில் இதுவரையில் 10 லட்சத்திற்கும் அதிகமான S-CNG கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ஒரு மில்லியன் டன் அளவிலான co2 வெளியேற்றத்தை மாருதி சுசூகி வாடிக்கையாளர்கள் குறைத்துள்ளனர்.

14 S-CNG கார் மாடல்

14 S-CNG கார் மாடல்

மத்திய அரசு மாற்று எரிபொருள் கார்களுக்கு அதிகப்படியான ஊக்கத்தை அளித்து வரும் நிலையில், மாருதி சுசூகி நிறுவனம் மட்டும் சுமார் 14 S-CNG கார்களை அறிமுகம் செய்து விற்பனைக்கு வைத்துள்ளது. இதேவேளையில் CNG கார்களைப் பயன்படுத்துவதில் சில சாதகப் பாதகம் உள்ளது, எனவே இதைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு சிஎன்ஜி கார்களை வாங்குவது உத்தமம்.

இவ்வளவு 'வரி' போட்டா யார் கார் வாங்குவா..? மத்திய அரசை விளாசும் ஆர்சி பார்கவா..!இவ்வளவு 'வரி' போட்டா யார் கார் வாங்குவா..? மத்திய அரசை விளாசும் ஆர்சி பார்கவா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maruti Suzuki New SUV car for Budget customers; Grand Vitara CNG priced at just 13 lakhs

Maruti Suzuki New SUV car for Budget customers; Grand Vitara CNG priced at just 13 lakhs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X