இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி நவம்பர் மாதம் கார் விற்பனை தரவுகளை டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிட்டது.

நவம்பர் மாத விற்பனை
நவம்பர் மாதத்தில் மாருதி சுசூகி சுமார் 1.59 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மொத்த கார் விற்பனை 1.39 லட்சமாக இருந்த நிலையில் நவம்பர் 2022 விற்பனையில் 14.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உள்நாட்டு விற்பனை
இதில் முக்கியமான மாருதி சுசூகியின் உள்நாட்டு விற்பனை சுமார் 18.8 சதவீதம் அதிகரித்துக் கடந்த ஆண்டு இருந்த 1.17 லட்சத்தில் இருந்து 1.39 லட்சமாக உயர்ந்துள்ளது.

உதிரிபாகங்கள் பற்றாக்குறை
மேலும், எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்களின் பற்றாக்குறை காரணமாக மாருதி சுசூகியின் வாகனங்களின் உற்பத்தியில், முக்கியமாக உள்நாட்டு மாடல்களில் சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியதாக இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உற்பத்தி பாதிப்பு
இந்த உற்பத்தி பாதிப்பை இன் வரும் காலத்தில் குறைக்க நிறுவனம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்ததுள்ளது, என்று பங்குச்சந்தைக்குச் சமர்ப்த்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மினி செக்மென்ட் கார்கள்
ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ போன்ற மினி செக்மென்ட் கார்களின் விற்பனை நவம்பர் 2021 இல் 17,473 ஆக இருந்த நிலையில் 2022 நவம்பரில் 18,251 கார்களை விற்பனை செய்துள்ளது.

காம்பேக்ட் பிரிவு கார்கள்
அதே நேரத்தில் பலேனோ, செலிரியோ, டிசைர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ் மற்றும் வேகன்ஆர் உள்ளிட்ட காம்பேக்ட் பிரிவு கார்களின் விற்பனை கடந்த ஆண்டு 57,019 ஆக மட்டுமே இருந்த நிலையில் இருந்து 72,844 ஆக இந்த நவம்பர் 2022 ஆம் மாதம் அதிகரித்துள்ளது.

யுடிலிட்டி பிரிவு கார்கள்
இதைத் தொடர்ந்து பிரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-கிராஸ், எக்ஸ்எல்6 மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற யுடிலிட்டி பிரிவு வாகனங்களின் விற்பனை நவம்பர் 2022ல் 32,563 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 24,574 ஆக மட்டுமே இருந்து.

மாருதி சுசூகி பங்குகள்
மேலும் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டின் நவம்பர் மாதம் 21,393 கார்களாக இருந்த நிலையில் கடந்த மாதம் 20,448 ஆகக் குறைந்துள்ளது. இதற்கிடையில், மாருதி சுசூகி இந்தியாவின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 0.19 சதவீதம் குறைந்து ரூ.8,965 ஆக வர்த்தகம் ஆனது.