வட கொரியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. சீனாவில் உணவுக்காக மக்கள் சன்டை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளிடம் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வரும் வட கொரியாவின் பொருளாதாரம் வேகமாகச் சரிந்து வரும் காரணத்தாலும், உணவு பற்றாக்குறை அதிகரித்த காரணத்தாலும் நாட்டு மக்கள் பசியில் வாடி வருகின்றனர்.

 

கடந்த வாரம் வட கொரிய அதிபர் கிம் உணவு பற்றாக்குறை அதிகமாக இருக்கும் காரணத்தால் தன் நாட்டு மக்களைக் குறைவாகச் சாப்பிடும் படி உத்தரவிட்டது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 வடகொரிய அதிபர் கிம்

வடகொரிய அதிபர் கிம்

வட கொரிய அதிபர் அந்நாட்டில் இருக்கும் உணவு பிரச்சனையை உலக நாடுகளிடம் இருந்து பல வாரங்களாக மறைந்து வருவதால் அந்நாட்டு மக்களின் நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. தென் கொரியாவில் இருக்கும் வட கொரியா மக்கள் தங்கள் குடும்பம் பசியில் வாடி வருவதாகக் கூறுகின்றனர்.

 பனிக்காலம்

பனிக்காலம்

மேலும் வட கொரியாவில் பனிக்காலம் வரும் நிலையில் இந்த உணவுப் பஞ்சம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கிறது. அனைத்தையும் தாண்டி வட கொரியா மற்றும் வட கொரியா மக்கள் குறித்த உண்மை நிலையை அறிவது பெரும் பிரச்சனையாக உள்ளது.

 சீன எல்லை
 

சீன எல்லை

கொரோனா தொற்றில் இருந்து வட கொரியா தன்னைக் காப்பாற்றிக்கொள்ளக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. சீன எல்லையையும் வட கொரியா மூடியது, இதனால் சீனா உடனான வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவாய் குறைந்துள்ளது.

 உணவு பஞ்சம்

உணவு பஞ்சம்

நீண்ட காலமாக வட கொரியாவில் உணவு பஞ்சம் இருந்தது, ஆனால் கொரோனா காலகட்டத்தில் இது மோசமான நிலை அடைந்துள்ளது. தற்போது வட கொரியாவில் ஏற்பட்டு உள்ள உணவு பஞ்சம் 1990ல் அந்நாட்டில் ஏற்பட்ட Arduous March-க்கு இணையாக ஒப்பிடப்படுகிறது. 1990 காலகட்டத்தில் உணவு பஞ்சத்தின் காரணமாகப் பல ஆயிரம் உயிர் இழந்தனர்.

 சீனா - வட கொரியா

சீனா - வட கொரியா

தற்போது உணவு பிரச்சனையைச் சமாளிக்க வட கொரியா சீன எல்லையைத் திறக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் சீனா வட கொரியா உணவு பிரச்சனையை முழுமையாகத் தீர்க்க முடியுமான என்பதில் பெரிய சந்தேகம் உள்ளது.

 சீனா லாக்டவுன்

சீனா லாக்டவுன்

சீனாவில் தற்போது கொரோனா தொற்று அதிகமான காரணத்தால் பல மாகாணத்தில் கடுமையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் சீனாவில் மீண்டும் முழு லாக்டவுன் அறிவிக்கப்படும் எனப் பயம் உள்ளதால் மக்கள் அதிகளவிலான உணவு பொருட்களை வாங்கிக் குவித்து வருகின்றனர்.

 உணவு தட்டுப்பாடு

உணவு தட்டுப்பாடு

இதனால் சீனாவிலும் அதிகளவிலான உணவு தட்டுப்பாடு உருவாகியுள்ளது, பல கடைகளில் உணவுப் பொருட்களின் காலியாகி வருவதாகவும், உணவு பொருட்களுக்காக மக்கள் சண்டைபோடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 கொரோனா அச்சம்

கொரோனா அச்சம்

இந்த நிலையில் வட கொரியா எல்லையைச் சீனாவுக்குத் திறந்தால் ஒரு பக்கம் உணவு பஞ்சம் படிப்படியாகக் குறைந்தாலும், கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதை வட கொரியா உலக நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படிச் சமாளிக்கப்போகிறது என்ற அச்சம் நிலவுகிறது.

 அணு ஆயுதம்

அணு ஆயுதம்

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களையும் மதிக்காமல் 2006-ம் ஆண்டு முதல் வடகொரியா அணு ஆயுதம் சோதித்து வருகிறது. வடகொரியாவின் செயல்பாட்டுக்கு அண்டை நாடாகத் தென் கொரியா முதல் அமெரிக்கா, இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்தது.

 பொருளாதாரத் தடை

பொருளாதாரத் தடை

இதைத் தொடர்ந்து வட கொரியா நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து, இன்று வரையில் உலகச் சந்தைக்கு வராமல் வட கொரியா முடங்கியுள்ளது. இதேபோல் நாட்டின் தயாரிக்கப்பட்ட ராக்கெட்-களும் பல முறை தோல்வியைச் சந்தித்து உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Massive famine in North Korea as bad as 1990s Arduous March; Chinese people in Panic buying

Massive famine in North Korea as bad as 1990s Arduous March; Chinese people in Panic buying
Story first published: Saturday, November 6, 2021, 21:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X