14 வருடங்களுக்கு பிறகு அதிகரிக்கபோகும் தீப்பெட்டி விலை.. ஒரு தீப்பெட்டியின் விலை எவ்வளவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களீன் விலை உயர்வால், உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இதனால் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டியின் விலையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த விலை உயர்வானது டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வானது 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக அதிகரிக்கபோவதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மூலதன பொருட்கள் விலை

மூலதன பொருட்கள் விலை

ஏற்கனவே எரிபொருளுக்கான மூலதன பொருட்களின் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ரெட் பாஸ்பரஸின் விலை 425 ரூபாயில் இருந்து, 810 ரூபாயாக அதிகரித்துள்ளது. மெழுகு விலையானது 58 ரூபாயில் இருந்து, 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வெளியில் இருக்கும் பெட்டியின் விலை 32 ரூபாயில் இருந்து, 58 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

14 வருடத்தில் இல்லாத அளவு ஏற்றம்

14 வருடத்தில் இல்லாத அளவு ஏற்றம்

தொடர்ந்து அதிகரித்து வரும் மூலதன பொருட்களின் விலைக்கு மத்தியில் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இதற்கியிடையில் இது தவிர பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவும் உற்பத்தியாளர்களின் செலவினை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் தீப்பெட்டி விலையை அதிகரிக்க உற்பத்தியாளார்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் உற்பத்தி
 

தமிழகத்தில் உற்பத்தி

தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி வேலூர் மற்றும் தர்மபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இது உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவும்.

விலைவாசி அதிகரிப்பு

விலைவாசி அதிகரிப்பு

ஏற்கனவே சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை, காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் பொருட்கள் விலை என அனைத்தும் உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக தக்காளி மற்றும் வெங்காயம் விலையானது விண்ணை தொடும் அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், இதுவும் சாமனியர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்க தொடங்கியுள்ளது.

சுமை குறையும்

சுமை குறையும்

இது இனி மக்கள் வழக்கத்தினை விட கூடுதலாக செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனினும் அனைத்து விலைவாசியும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தீப்பெட்டி உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் நஷ்டம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த விலை அதிகரிப்பானது மேற்கொண்டு உற்பத்தியாளர்களின் சுமையும், தொழிலாளர்களின் சுமையும் குறைய வாய்ப்பாக அமையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Match box price increasing after 14 years due to rising costs

Inflation latest updates.. Match box price increasing after 14 years due to rising costs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X