6 மாதத்திற்குப் பின் மெக்டொனால்டு திறக்கப்பட்டது.. மும்பைவாசிகள் ஹேப்பி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாஸ்ட் புட் உலகில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் மெக்டொனால்டு இந்தியாவிலும் பல நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் பர்கர்களுக்கு இந்தியாவில் பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

 

கொரோனா காரணமாக நாடு முழுவதும் மெக்டொனால்டு கடைகள் மூடப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக லாக்டவுன் தளர்வுகளுக்குப் பின் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் மேற்கு மற்றும் தென் இந்தியாவில் மெக்டொனால்டு கடைகளை நடத்தும் வெஸ்ட்லைப் லெவலப்மென்ட் நிறுவனம் கொரோனா காரணமாக 6 மாதங்களாக மூடப்பட்ட மெக்டொனால்டு கடைகளை மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது திறந்துள்ளது.

வெஸ்ட்லைப் லெவலப்மென்ட் நிறுவனம் மெக்டொனால்டு கடைகளைத் திறப்பதற்கு முன்பே ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உயர்தரச் சுத்தம் மற்றும் பராமரிப்பையும் கடைப்பிடிப்பதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தில் 75% பங்குகளைக் கைப்பற்றினார் அதானி..!

Golden Guarantee பிளாட்பார்ம்

Golden Guarantee பிளாட்பார்ம்

மகாராஷ்டிராவில் மெக்டொனால்டு கடைகளைத் திறக்கும் வெஸ்ட்லைப் லெவலப்மென்ட் நிறுவனம் Golden Guarantee பிளாட்பார்ம் என்ற உயர் தர பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுவையான உணவு பழக்கத்தைக் கொண்டு மக்களுக்கு Dine in சேவைகளை வழங்குகிறது.

வெஸ்ட்லைப் லெவலப்மென்ட் நிறுவனம் கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்கு மற்றும் தெற்கு பிராந்திய கடைகளில் Golden Guarantee பிளாட்பார்ம் கீழ் சுமார் 42 உயர் தரப் பாதுகாப்பு, சுகாதாரம் நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

42 சுகாதார முறை

42 சுகாதார முறை

42 உயர் தர பாதுகாப்பு, சுகாதாரம் நடைமுறைகளைக் கொண்ட இந்த Golden Guarantee பிளாட்பார்ம் மூலம் மெக்டொனால்டு ஊழியர்கள் உணவுகளைத் திறந்த கைகளில் தொடாதவாறு சமைத்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க உள்ளது.

இந்த 42 விதிமுறைகளில் சமுக இடைவெளி முதல் பாதுகாப்புக் கவசங்கள் வரையில் அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்களும் அடங்கும்.

சவுரப் கார்லா
 

சவுரப் கார்லா

6 மாதங்களுக்குப் பின் கடைகள் திறக்கப்படும் நிலையில் மக்களுக்கு உயர்தரப் பாதுகாப்புடன் அரசு விதிகள் அனைத்தையும் கடைப்பிடிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு உயர் தர அனுபவத்தை எப்போது போலவே கொடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என் மெக்டொனால்டு இந்தியா நிறுவனத்தின் சிஓஓ சவுரப் கார்லா தெரிவித்துள்ளார்.

பேமெண்ட்

பேமெண்ட்

அனைத்திற்கும் மேலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர் மற்றும் பேமெண்ட் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பெற தளம் உருவாக்கப்பட்டுள்ளது. பேமெண்டுக்காக யூபிஐ மற்றும் டேப் அண்ட் பே முறையும், ஆர்டர் செய்வதற்காக வாட்ஸ்அப் மூலம் செய்யவும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது எனச் சவுரப் கார்லா தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

McDonald's open for food lovers after 6 months of lockdown in Maharashtra

McDonald's open for food lovers after 6 months of lockdown in Maharashtra
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X