அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அதிகரிக்கும் சிக்கல்.. பேஸ்புக்கின் நடவடிக்கை தான் காரணமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பிளார்ட்பார்ம் இன்க் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதன் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது மெட்டா நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பணி நீக்கமாக பார்க்கப்படுகிறது.

இந்த பணி நீக்க நடவடிக்கையில் அமெரிக்காவில் ஹெச் 1பி விசா மூலம் பணியாற்றும் ஊழியர்களும் அடங்குவர் எனலாம்.

இதன் காரணமாக பல வெளிநாடு வாழ் ஊழியர்கள், குடியேற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி எங்கே கிடைக்கும்.. கண்பிடிக்க வருகிறது புதிய ஆப்.. பேஸ்புக்கின் சூப்பர் திட்டம்..! தடுப்பூசி எங்கே கிடைக்கும்.. கண்பிடிக்க வருகிறது புதிய ஆப்.. பேஸ்புக்கின் சூப்பர் திட்டம்..!

விசா மூலம் பணியாற்றுபவர்களுக்கு உதவி

விசா மூலம் பணியாற்றுபவர்களுக்கு உதவி

நிறுவனத்தில் ஹெச் 1 பி விசா மூலம் பணியாற்றும் ஊழியர்களுக்கு மார்க் ஜூக்கர்பெர்க் நிர்வாகம் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். பணியிழந்த நிலையிலும், இது மெட்டா ஊழியர்கள் மத்தியில் பெரும் ஆறுதலை அளித்துள்ளது எனலாம்.

உங்களுக்கு உதவும்

உங்களுக்கு உதவும்

இது குறித்து வெளியான அறிக்கையில், எனக்கு தெரியும், நீங்கள் இங்கு விசா மூலம் பணியாற்றுகிறீர்கள் எனில், இது உங்களுக்கு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மெட்டா நிறுவனம் உதவும் என்று ஆறுதலாக கூறியுள்ளார். உங்களுக்கு எங்களது சிறப்பு குடியேற்ற அதிகாரிகள் உதவுவார்கள் என தெரிவித்துள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்டால் என்ன செய்வது?
 

பணி நீக்கம் செய்யப்பட்டால் என்ன செய்வது?

அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா மூலம் பணியாற்றும் ஊழியர்களில் 3 ஆண்டுகள் அங்கு பணியாற்றி கொள்ளலாம். அதற்கும் மேற்கோண்டு அதே 3 ஆண்டுகாலம் நீட்டித்துக் கொள்ளலாம். ஒரு வேளை இந்த விசாவில் பணிபுரியும்போது நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், 60 நாட்கள் உங்களுக்கு கால அவகாசம் கிடைக்கும். அந்த காலகட்டத்திற்குள் நீங்கள் வேறு பணியில் சேர்ந்து கொள்ளலாம். அப்படி சேராவிட்டால், நீங்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும்.

யாருக்கு அதிக பிரச்சனை?

யாருக்கு அதிக பிரச்சனை?

பொதுவாக அமெரிக்காவில் உள்ள டெக் நிறுவனங்களில் ஹெச் 1பி விசா மூலம், அதிகம் பயன்பெறுவது இந்திய ஐடி ஊழியர்கள் தான். ஆக இந்த பணி நீக்க நடவடிக்கையிலும், குடியேற்ற பிரச்சனையிலும் அதிகம் பாதிக்கப்படபோவதும் இந்தியர்கள் தான். இந்தியர்கள் மட்டும் அல்ல, சீனர்களும் இந்த பணி நீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

 இந்தியர்கள் பெரியளவில் பாதிப்பு

இந்தியர்கள் பெரியளவில் பாதிப்பு

மெட்டா நிறுவனத்தில் 13% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட போகும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்தான தெளிவான தரவுகள் இல்லாவிட்டாலும் நிச்சயம் இந்திய ஊழியர்கள் பெரியளவில் பாதிக்கப்படலாம் என தெரிகிறது.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு என்ன சலுகை?

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு என்ன சலுகை?

தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்களுக்கு 16 வார ஊதியம், கூடுதலாக 2 வார ஊதியம், அடுத்த 6 மாதங்களுக்கு ஊழியருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவக் காப்பீடு, வேறுவேலை தேடுவதற்கு தேவையான உதவி போன்ற உதவிகளை வழங்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

உலகளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் அமெரிக்க டெக் துறையானது பெரியளவில், பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் தான் மெட்டா நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளது.

ட்விட்டரிலும் இதே பிரச்சனை

ட்விட்டரிலும் இதே பிரச்சனை

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவன ஊழியர்கள், பெரியளவில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பலரும் ஹெச் 1 பி விசா மூலம் பணி புரிந்து வரும், சில ஊழியர்கள் இந்த பணி நீக்க பட்டியலில் இருப்பதாகவும், அவர்களுக்கு 60 நாள் காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களின் குடியேற்றமும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

meta support to H 1B visa holders including many Indians

Mark Zuckerberg's administration has said it will help employees working on H1B visas. This seems to have been a source of great comfort among the Meta employees, despite the layoffs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X