கொரோனா நெருக்கடியின் காரணமாக மிகவும் நொடிந்து போன துறைகளில் வாகனத் துறையும் ஒன்று. ஆனால் கடந்த சில மாதங்களாகவே விற்பனையானது துளிர் விடத் தொடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பொருளார மந்த நிலையினால் வாகத் துறையானது பெருத்த அடி வாங்கியது எனலாம்.
இதனை இன்னும் மோசமாக்கும் விதமாகத் தான் கொரோனாவும் வந்தது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பெருத்த விற்பனை சரிவினை கண்டு வரும் வாகன நிறுவனங்கள், கடந்த சில மாதங்களாகத் தான் சற்று விற்பனை அதிகரித்துள்ளதாக கூறி வருகின்றன.

விற்பனை அதிகரிப்பு நிலையானது அல்ல
அதோடு இனி வரும் மாதங்களில் விழாக்கால பருவம் என்பதால், நிச்சயம் வாகன விற்பனையானது அதிகரிக்கும் என்றும் நம்பிக்கையுடன் கூறி வருகின்றன. ஆனால் மறுபுறம் வாகன் விற்பனையில் ஏற்பட்ட இந்த மீட்சியானது நிலையானது அல்ல. ஏனெனில் வாகன விற்பனை என்பது பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்ட ஒரு தூறையாகும்.

இந்த விற்பனை சரியானது அல்ல
லாக்டவுனுக்கு பிறகு ஜூன் மாதத்தில் இருந்து வாகன விற்பனையானது படிப்படியாக அதிகரிகக் ஆரம்பித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே வேகமெடுக்க தொடங்கியுள்ளது. எனினும் இது ஒரு நிலையான மீட்பு என நாம் எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் மக்கள் லாக்டவுன் காரணமாகவும், சுகாதாரத்தின் காரணமாகவும், பொதுப் போக்குவரத்தில் இருந்து, தனியார் போக்குவரத்துக்கு மாறி வருகின்றனர். ஆக இப்போது காரை வாங்க விரும்புபவர்கள் அவர்களே. ஆக இது சரியான மீட்பு அல்ல. இது தந்திரோயோயமானது என்றும் சாபா கூறியுள்ளார்.

வலுவான தேவை என்பது?
மேலும் நிலையான அல்லது வலுவான தேவை என்பது பொருளாதாரத்தினை பொறுத்தது. வாகனத் தொழில் என்பது நாட்டின் பொருளாதாரத்துடன் பெரிதும் இணைக்கப்பட்டுள்ளது. வாகனத் தொழிலானது பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவுகிறது. பொருளாதார வளர்ச்சி வாகன தொழிலுக்கு பெரிதும் உதவுகிறது. ஆக இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது.

அடுத்த சில மாதங்களுக்கு விழாக்கால பருவம்
எப்படி இருப்பினும் அக்டோபர், அடுத்து வரும் நவம்பர், டிசம்பர்களில் விற்பனையானது நன்றாக இருக்கும். எனினும் இந்த ஆண்டு முழுவதும் கணக்கிடும்போது 23 - 25% இத்துறையில் வீழ்ச்சி இருக்கும் என்றும் சாபா கூறியுள்ளார். அதோடு ஜனவரி முதல் அரசின் ஊக்கத் தொகை, பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சி தன்மை, தடுப்பூசிகளை பொறுத்தே இத்துறையில் வளர்ச்சி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

வாகன விற்பனை வளர்ச்சி
கடந்த செப்டம்பர் மாதத்தில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பட்டையை கிளப்பியுள்ளன. குறிப்பாக மாருதி சுசூகி, ஹீண்டாய் மோட்டார்ஸ் இரண்டு இலக்க வளர்ச்சியினை கண்டுள்லன. இதே டாடா மோட்டார்ஸ், ஹோண்டா கார்ஸ், ஸ்கோடா இந்தியா, கியா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனையை அதிகரித்துள்ளன. எனினும் இந்திய நிறுவனமான மகேந்திரா & மகேந்திரா, டொயோட்டா, உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னும் வீழ்ச்சியிலேயே தான் உள்ளன.