Finolex பைப் நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் டீல்.. புனே-வில் முக்கியத் திட்டம்.. 330 கோடி முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கும் மைக்ரோசாப்ட், ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோவில் பெரும் தொகையை முதலீடு செய்து உள்ளது.

 

இந்த நிலையில் இந்தியாவில் புதிய டேட்டா சென்டரை அமைக்கும் திட்டத்திற்காக நாட்டின் முன்னணி பிவிசி பைப் தயாரிக்கும் Finolex இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் 25 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் எங்கு டேட்டா சென்டர் அமைக்கப் போகிறது தெரியுமா..?

செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. ! செம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. !

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

இந்தியாவில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் மிகவும் சிறப்பாக உள்ளது குறிப்பாக ஆடம்பர வீடுகள், ரீடைல் ஸ்பேஸ், அலுவலக இடங்கள், தொழிற்சாலை அமைப்பதற்கான நில விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மைக்ரோசாப்ட் - Finolex

மைக்ரோசாப்ட் - Finolex

இந்த நிலையில் இந்தியாவில் புதிய டேட்டா சென்டரை அமைப்பதற்காக மைக்ரோசாப்ட் Finolex இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் 25 ஏக்கர் நிலத்தை மகாராஷ்டிர மாநிலத்தின் புனே அருகில் இருக்கும் Pimpri என்னும் இடத்தில் வாங்கியுள்ளது. இதற்காக மைக்ரோசாப்ட் சுமார் 16 கோடி ரூபாய் அளவிலான பத்திரப் பதிவு கட்டணத்தைச் செலுத்தியுள்ளது.

டேட்டா சென்டர்
 

டேட்டா சென்டர்

டேட்டா சென்டர் அமைப்பதில் உலகளவில் முன்னோடியாக இருப்பது மைக்ரோசாப்ட் தான், இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து தான் அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் கூகுள் உள்ளது. உலகளவில் இருக்கும் ஒட்டுமொத்த டேட்டா சென்டர்களில் 50 சதவீதம் இந்த 3 நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளது. இதில் அதிகம் முதலீடு செய்வது மைக்ரோசாப்ட்.

10.09 பில்லியன் டாலர்

10.09 பில்லியன் டாலர்

இந்தியாவின் டேட்டா சென்டர் வர்த்தகச் சந்தை 2021ல் 4.35 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது, 2027ல் இது 10.09 பில்லியன் டாலராக உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு இந்தியாவில் வர்த்தகம் செய்யும் அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியர்களின் தரவுகளை இந்தியாவிற்குள்ளேயே வைக்க வேண்டும் என உத்தரவிட்டது மூலம் டேட்டா சென்டருக்கான தேவை அதிகரித்துள்ளது.

பிம்ப்ரி தொழில்துறை பகுதி

பிம்ப்ரி தொழில்துறை பகுதி

மகாராஷ்டிர மாநிலத்தில் பிம்ப்ரி-சின்ச்வாட் தொழில்துறை பகுதியில் சமீப காலமாக அதிகப்படியான நிறுவனங்கள் நிலத்தை வாங்கவும், விற்பனை செய்தும் வருகிறது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்கும் காரணத்தால் பலரின் கவனம் தற்போது பிம்ப்ரி-சின்ச்வாட் தொழில்துறை பகுதி மீது திரும்பியுள்ளது. சமீபத்தில் இப்பகுதியில் க்ரீவிஸ் காட்டன், மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் நிலத்தை வாங்கியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft buys land from Finolex Industries; satya nadella plans to setup new data centre

Microsoft buys 25 Acre land from Finolex Industries in Pimpri-Chinchwad industrial corridor; satya nadella plans to setup new data centre for indian market
Story first published: Friday, October 21, 2022, 12:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X