மைக்ரோசாப்ட் கைப்பற்றிய நுவான்ஸ்.. 19.7 பில்லியன் டாலர் டீல்... சத்ய நாடெல்லா அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் மிகப்பெரிய டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் கடந்த சில வருடங்களாகப் பல துறைகளில் நிறுவன கைப்பற்றல் மூலம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் தொடர்ந்து வலிமைப்படுத்தி வருகிறது.

 

2016ஆம் ஆண்டுச் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்துடனான கடும் போட்டிக்கு மத்தியில் மைக்ரோசாப்ட், ஊழியர்களுக்கான சமூகவலைத்தளமாக இருக்கும் லிங்க்டுஇன் தளத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 26.2 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. இது மைக்ரோசாப்ட் வரலாற்றின் மிகப்பெரிய கைப்பற்றலாக இருந்தது.

 புதிய மைக்ரோசாப்ட் கைப்பற்றல்

புதிய மைக்ரோசாப்ட் கைப்பற்றல்

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 19.7 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகைக்கு அமெரிக்காவின் முன்னணி கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான நுவான்ஸ் கம்யூனிகேஷ்ன்ஸ் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் அதிகத் தொகைக்குக் கைப்பற்றிய நிறுவனங்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது நுவான்ஸ்.

 கிளவுட் சேவை

கிளவுட் சேவை

மைக்ரோசாப்ட் நிறுவனம் கிளவுட் சேவை தான் தனது எதிர்காலம் என முடிவு செய்துள்ள நிலையில், துறை சார்ந்த கிளவுட் சேவைகளை அளிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. குறிப்பாக உலகம் முழுவதும் தற்போது கிளவுட் சேவைக்கான பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் துறையில் இருக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகளை இழக்கக் கூடாது எனத் துறை சார்ந்த சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது.

 ஹெல்த்கேர் துறை முக்கிய இலக்கு
 

ஹெல்த்கேர் துறை முக்கிய இலக்கு

இதன் படி 2020ல் ஹெல்த்கேர் துறைக்கான மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகள் திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் ஹெல்த்கேர் துறையில் மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் மேம்பட்ட சேவைகளைப் புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக அளிப்பதன் மூலம் பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் வருமானத்தைப் பெற முடியும் என மைக்ரோசாப்ட் நம்புகிறது.

 நுவான்ஸ் கம்யூனிகேஷ்ன்ஸ்

நுவான்ஸ் கம்யூனிகேஷ்ன்ஸ்

இதற்காக ஹெல்த்கேர் துறையில் பல வருடங்களாகக் கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சேவை அளித்து வரும் நுவான்ஸ் கம்யூனிகேஷ்ன்ஸ் என்னும் நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது மைக்ரோசாப்ட். இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனம் conversational AI பிரிவில் உலகளவில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.

 முக்கியச் சேவைகள்

முக்கியச் சேவைகள்

குறிப்பாக நுவான்ஸ் கம்யூனிகேஷ்ன்ஸ் டிராகன்Ambient eXperience, டிராகன் மெடிக்கல் ஓன் மற்றும் ரேடியோலாஜி ரிப்போர்ட்டிங்க்கான பவர்ஸ்லைட் ஒன், SaaS தொழில்நுட்பத்தில் இயங்கும் clinical speech recognition சேவை ஆகியவை அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகளவில் வரவேற்பு பெற்றுள்ளது.

 19.7 பில்லியன் டாலர் ஒப்பந்தம்

19.7 பில்லியன் டாலர் ஒப்பந்தம்

இதன் காரணமாகச் சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட், வருடத்திற்கு 37 சதவீதம் வளர்ச்சி அடைந்து வரும் நுவான்ஸ் கம்யூனிகேஷ்ன்ஸ் நிறுவனத்தை ஒரு பங்கு 56 டாலர் என்ற 23% ப்ரீமியம் விலையில் மொத்த நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் 19.7 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மொத்தமாகப் பணமாகச் செலுத்தியுள்ளது மைக்ரோசாப்ட்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft buys Nuance Communications for $19.7 bn : 2nd largest acquisition

Microsoft buys Nuance Communications for $19.7 bn : 2nd largest acquisition
Story first published: Tuesday, April 13, 2021, 13:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X